பொது அறிவு
Published:Updated:

பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு சல்யூட்!

பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு சல்யூட்!
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு சல்யூட்!

ஆயிஷா இரா.நடராசன்

மாநில அளவில் முதல் மதிப்பெண்... மாவட்டத்தில் நானே ஃபர்ஸ்ட் என்பதெல்லாம் இனி இல்லை.

மதிப்பெண்கள்தான் எல்லாமே என்பதுபோல ஒரு மன அழுத்தம் வேறு எதுவுமே கிடையாது. இது, மிகத் தவறான அணுகுமுறை என்று உளவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் எச்சரித்தும், அது மாற்றப்படவில்லை. இதனால், குழந்தைகளின் கதை, கவிதை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட திறமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு சல்யூட்!

ஒவ்வோர் ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளைச் சுமார் 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்களில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என, சுமார் 20 பேர் தமிழகத்தின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளில், தொலைக்காட்சிச் செய்திகளில் இடம்பெறுவர். அதுவும் இரண்டு, மூன்று நாள்களுக்குத்தான்.

இந்த மதிப்பெண் பந்தயத்தால், முதல் மதிப்பெண் எடுத்தே ஆகவேண்டும் எனும் எண்ணம், மன அழுத்தம், ஒபிசிட்டி, இதயநோய் என உடல் அளவிலும்... வெறுப்புஉணர்வு, தனிமைப்பட்டுப்போவது, பொறாமை குணம் என உள்ளத்தளவிலும் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு முடிவில் மதிப்பெண் குறைந்த சிலர், தற்கொலை முடிவுக்கும் சென்றுவிடுகின்றனர். கல்வி மலைவாழை போல குருத்துவிட்டு, செல்வமாய்ப் பெருகவேண்டிய வரம். அது, ஒருபோதும் சாபமாக மாறக்கூடாது.

தாய்மொழியான தமிழில் கற்பவர்களின் மாண்புகளைக் காப்பாற்ற, அரசு - தனியார் கல்வி எனும் இடைவெளியை, பாகுபாட்டை முடித்து வைக்க, ‘இனித் தேர்வு முடிவுகளை அரசு புதிய விதமாக அறிவிக்கும்’ எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மாணவர்கள்  இதனைக் கை தட்டி ஆரவாரமாக வரவேற்றனர். தேர்வு எழுதி வெற்றிபெறும் எல்லாருமே வெற்றியாளர்கள் என்பதும், இது ஓட்டப்பந்தயமல்ல... வாழ்வின் ஒரு படிநிலை மட்டுமே என்பதும் மிகவும் பெருமைக்குரிய அறிவிப்பு.