
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்!
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என்ற திறனை மாணவர்களுக்கு எளியமுறையில் உணர்த்்த முடிவுசெய்தேன். அதற்கு அவர்களைச் சாண எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்தும் வீட்டுக்கும், சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்யும் தெருவிளக்குக் கம்பத்துக்கும், டைனமோ வேலைசெய்யும் விதத்தை மிதிவண்டியைவைத்தும், காற்றின்மூலம் மின் உற்பத்தி செய்யும் திறன் அறிய, சென்ற ஆண்டு சுற்றுலா சென்றபோது எடுத்த காற்றாலை அமைப்பின் படங்களை நினைவுபடுத்தியும் உரிய விளக்கங்கள் தரப்பட்டன.


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி சாண எரிவாயு அமைப்பு, வறட்டி, சூரிய மின் சக்கி தகட்டுடன் கூடிய வீடு, இயங்கும் காற்றாலை மாதிரிகளைச் செய்தும் மற்றும் பாடக்கருத்து தொடர்பான படங்களை வரைந்து வந்தும் அசத்தினர்.
- கு.பரணிதரன்,
ஊ.ஒ.தொ.பள்ளி, கரூர்.
படம்: ராஜுமுருகன்