Published:Updated:

`தங்கள் ஊர் ஏரி' பாசனம் பெறுவது எப்படி? - ஆய்வு செய்து தேசியப்போட்டிக்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்கள்

`தங்கள் ஊர் ஏரி' பாசனம் பெறுவது எப்படி? - ஆய்வு செய்து தேசியப்போட்டிக்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்கள்
News

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தங்கள் ஊர் ஏரியில் காவிரியிலிருந்து நீர் நிரப்புவது சம்பந்தமாக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த ஆய்வு தேசியப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில் பரந்து விரிந்திருக்கிறது பஞ்சப்பட்டி ஏரி. சுற்றியுள்ள 25 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய இந்த பிரமாண்ட ஏரி கடந்த 20 வருடங்களாக வறண்டுபோய் கிடக்கிறது. 'கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஏரியில் காவிரியில் தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்' என்று கிராம மக்கள் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான், காவிரியிலிருந்து இந்தப் பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு போவது சம்பந்தமாக ஒரு மாணவியும் மாணவனும் செய்த ஆய்வு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, தேசியப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது. இந்தக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் காயத்ரி, மணீஸ்வர் என்ற இரு மாணவர்கள்தான் வழிகாட்டு ஆசிரியர் ஜெய்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோரின் உதவியோடு இந்த அசத்தல் ஆய்வை மேற்கொண்டவர்கள். 26-வது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்தான், 'விவசாயிகளின் எதிர்காலம் ஏரியையும், அதனால் பயனடையும் விசாயத்தை நோக்கி...' என்ற தலைப்பில் இந்த ஆய்வை செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வென்றது இந்த ஆய்வு. தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, தேசிய அளவில் ஒடிசா, புவனேஷ்வரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இதன்மூலம், மத்திய அரசின் கவனம் பெற்று, இந்த மாணவர்களின் ஆய்வால் தங்கள் ஊர் ஏரியில் நீர் நிரம்ப வழி கிடைக்கும் என்று ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி, காயத்ரி மற்றும் மணீஸ்வர் ஆகியோரிடம் பேசினோம். ``எங்களுக்கும் பயன்படணும், அதன் மூலமா ஊருக்கும் பயன்படணும்னு சொல்லிதான் ஜெய்குமாரின் உதவியோடு இந்த ஆய்வை மேற்கொண்டோம். கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியும் அமராவதி ஆறும் சங்கமிக்கிற இடம் திருமுக்கூடலூர். இந்த இடத்தில் காவிரியில் ஓர் தடுப்பணை கட்டினால், 2 டி.எம்.சி நீரை தேக்க முடியும். அப்படித் தேக்கப்படும் நீரை கால்வாய் வெட்டி பஞ்சப்பட்டி ஏரியை நிரப்புவதோடு, அதன்வழியாக உபரி நீரை ராமநாதபுரம் வரை கொண்டு போக முடியும். அதேபோல், லாலாப்பேட்டை அருகே காவிரியில் ஓர் தடுப்பணை கட்டினால், அதன்மூலமும் பஞ்சப்பட்டி ஏரியில் எளிதாக நீர் நிரப்ப முடியும்.

கரூரில் ஓடும் காவிரி மட்டத்தைவிட பஞ்சப்பட்டி கிராமத்தில் மட்டம் 17 மீட்டர் உயரமானது. அதனால், இப்படி தடுப்பணை கட்டினால் மட்டுமே பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு செல்ல முடியும். அப்படி பஞ்சப்பட்டி ஏரி நிரப்பப்பட்டால், 5 குளங்களும், 25 கிராமங்களும் நீர் ஆதாரம் பெறும். பஞ்சப்பட்டி ஏரியில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் 20,000 டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்ய முடியும். ஏரியின் வெளிப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் உள்ளது. அவற்றில் பறவைகள் சரணாலயம், பூங்கா அமைத்து, போட்டிங் விட்டு, இந்த ஏரியை சுற்றுலாத்தலமாகவும் ஆக்க முடியும். இதனால், அரசுக்கு வருமானம் பெருகும். இதை முன்வைத்து நாங்க செய்த ஆய்வுதான் தேசிய அளவிலான மாநாடுக்குத் தேர்வாகி இருக்கு. அங்கே எங்க ஆய்வு வெற்றி பெற்றுச்சுன்னா, மத்திய அரசோட பார்வை எங்க ஏரிக்கு கிடைத்து, அதனால் ஏரியில் நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படலாம்னு சொல்றாங்க. எங்க ஆய்வு எங்க ஊருக்குப் பயன்படும் வகையில் அமைந்துபோனது உண்மையில் எங்களுக்குப் பெருமை" என்றார்கள் மகிழ்ச்சியாக!