Published:Updated:

பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வு; 3 பேர் டிஸ்மிஸ்!- நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி

பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வு; 3 பேர் டிஸ்மிஸ்!- நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி
News

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிகளைச் சரிவரச் செய்யத் தவறிய மேலும் 3 பேராசிரியர்களை நெல்லை பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பணியாற்றிய பேராசிரியர் கோவிந்தராஜூ, ஆய்வு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியதில், புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவிட்டார். 

பின்னர், இந்தப் புகார் குறித்து மேல்மட்ட கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க விசாரணை கமிட்டி பரிந்துரை செய்தது. அதனால் அவர் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டார். அதற்கான உத்தரவுக்கு ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித்ததால் உடனடியாக அவர் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டார்.

அத்துடன், ஆங்கிலத்துறையில் பணியாற்றிய இணைப் பேராசிரியர்கள் பூவலிங்கம், ரமேஷ், உதவிப் பேராசிரியர் ஜெனிட்டா ஆகியோர் சரிவர பாடம் நடத்தாமலும், வகுப்புகளுக்கு முறையாகச் செல்லாமலும் இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. அத்துடன், மூவரும் ஆங்கிலத் துறைத் தலைவரின் கூட்டங்களில் பங்கேற்க மறுத்துக் கூட்டங்களைப் புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

மூவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், நிர்வாகத்தின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதனால் அவர்கள் மூவர் மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரி, ஓய்வு பெற்ற பல்கலைக்கழகப் பதிவாளர், மூத்த பேராசிரியர் ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 

ஆனால், அந்தக் குழுவின் விசாரணைக்கும் பூவலிங்கம், ரமேஷ், ஜெனிட்டா ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அக்குழு நடத்திய விசாரணைக்குப் பின்னர், மூவரையும் பணி நீக்கம் செய்யுமாறு ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தனர். அதனால் இந்த விவகாரம் குறித்தும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் மூவரையும் பணி நீக்கம் செய்ய ஆட்சி மன்றக் குழு முடிவு செய்தது. அதன்படி மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.