தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

வார்த்தை வசீகரா!

வார்த்தை வசீகரா!
பிரீமியம் ஸ்டோரி
News
வார்த்தை வசீகரா!

Engliஷ் Wingliஷ்தீபா ராம்

ன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மொழி அழிவதில்லை. அதைத்தான் ஆங்கிலம் செய்கிறது.

ஆங்கிலமொழி, வரலாறு முழுவதும் ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் இருந்து சொற்களை உள்வாங்கி, தன்னுள் சேர்த்துக்கொண்டதால் நவீன ஆங்கிலம் பரந்த சொல்வளமும் கொண்டுள்ளது. அதனால்தான் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி 2,50,000-க்கும் அதிகமான வித்தியாசமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது.

வார்த்தை வசீகரா!

கராத்தே, சுடோகு, பர்பெகே (Barbecue), சாண்ட்விச், லான் (Lawn), ஏர்போர்ட் Lounch இப்படி நாம் அன்றாடம் கேட்கும், பேசும் பல வார்த்தைகளும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் போன்ற மொழிகளில் இருந்து வந்தவையே.
Chaise-lounge சோபா என்றொரு மர நாற்காலி இருக்கிறது. ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளலாம். இது, பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த டிசைன் சோபா. இந்தப் பொருளோடு அந்தப் பொருளின் பிரெஞ்சுப் பெயரும் ஆங்கில அகராதியில் குடிபுகுந்தது. Chaise-lounge இந்தப் பெயருக்குப் பதிலாகப் புதிதாக ஆங்கில வார்த்தையைத் தோற்றுவிக்காமல் உள்ளதை உள்ளபடியே ஆங்கிலம் ஏற்றுக்கொண்டது. இதனால் பொருளின் அடையாளத்தன்மை முன்பைவிட எளிதாக இருக்கிறது.

வசதிக்காகவும், எளிதாக அடையாளப்படுத்தவும் ஆங்கிலம் இப்படித்தான் மாற்றுமொழிச் சொற்களை அதனுடைய எழுத்துகளைக்கூட மாற்றாமல் தன்னுள் சேர்த்து உலக பொதுமொழியாகப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
`தும்மும்போது உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்' என வாழ்த்தும் அடைமொழி Gesundheit... ஜெர்மன் மொழியில் இருந்துவந்த இந்த வார்த்தை இன்று ஆங்கில நாவல்களில் சர்வசாதாரணமாகத் தென் படுகிறது. இது பேச்சு வழக்கில் வர நாளானாலும், எழுத்து வடிவத்தில் இன்றும் உலவுகிறது.

எப்படி நாம் கத்திரிப்பூ கலர், கனகாம்பர கலர் என வாழ்ந்தோமோ, அதை இன்றைய குழந்தைகள் லாவெண்டர், பர்பிள், பேபி பிங்க், Vermilion, Pollen மஞ்சள் என்று சொல்லி அடையாளம் காட்டுகிறார்கள். காய்ந்து உதிரும்போது இலை ஒரு பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த நிறத்துக்குப் பெயர் Feuillemort. பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த வார்த்தை இது. நாள் செல்லச் செல்ல இதுபோன்ற வார்த்தைகளும் பேச்சுவழக்கில் வந்துவிடும்.