Published:Updated:

தஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் அருகே கோயில் பராமரிப்பு பணி - மராத்திய எழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
News

பேராவூரணி அருகே கோயில் ஒன்றில், பராமரிப்பு பணிகள் செய்த போது மராத்தி மொழியான மோடி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டன.

பேராவூரணி அருகே உள்ளது பெருமகளூர் என்ற கிராமம். இங்கு சிதிலமடைந்து இருந்த சிவன் கோயிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அந்த கிராம மக்கள். பராமரிப்பு பணியின் போது பூமிக்கு அடியில் இருந்து சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை பற்றி அறிந்து கொள்ள அந்த ஊரை சேர்ந்த சண்முகநாதன் என்பவர்  கல்வெட்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை படித்து கூறும்படி தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதரும்,தொல்லியல் ஆய்வாளருமான மணி.மாறன் என்பவரை அனுகினார். பிறகு மணி. மாறன் முனைவர் ஜம்புலிங்கம்,தில்லை கோவிந்தராஜன், இராமமூர்த்தி ஆகியோருடன் பெருமகளூருக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். 

இது குறித்து  மணி.மாறன் கூறியதாவது, பெருமகளூரில் உள்ள சோமநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும். இந்த கோயில் குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டுள்ளது.பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாபசிம்மன் மோடி எழுத்துக்களால் ஆன கல்வெட்டை பரிசாக கொடுத்துள்ளான்.மராத்தி மொழி எனப்படுகிற மோடி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களே  தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.இதில் செப்பேடு மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுவது போன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.மேலும், சூரிய, சந்திரரைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது.கல்வெட்டில் உள்ள மோடி எழுத்துக்களில் காணப்படும் பொருள் பிரதாபசிம்மன் பெருமகளூர் கோயிலுக்கு வழங்கிய நன்கொடையினை பற்றி கூறுகிறது .

5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது.  ஆனால் தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால் படிக்க முடியவில்லை.மேலும் இந்த கோயில் சோழர் காலக்கோயில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கோயிலுக்கு நேர் எதிராக காவிரிக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றபோது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சோழர் காலத்துக் கோயிலில் கிடைத்துள்ள மராத்தி மொழியான மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இது மட்டும் தான் என மணி.மாறன் தெரிவித்தார்.