Published:Updated:

இன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி? விரிவான வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

அண்ணா பல்கலைக்கழகம்
News
அண்ணா பல்கலைக்கழகம்

இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Published:Updated:

இன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி? விரிவான வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
News
அண்ணா பல்கலைக்கழகம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், இன்ஜினீயரிங் கவுன்சலிங்குக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்ற கேள்வியை எழுப்பிருந்தார் வாசகர் ஜெயக்குமார். அந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of a common man
Doubt of a common man

தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. காலை முதலே பரபரப்பாக மாணவர்கள் பலரும் ரிசல்ட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பலரும் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை சிந்திக்கத் தொடங்கியிருப்பர். இந்நிலையில் இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. http://www.tndte.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இந்த இணையதளத்தில் `TNEA 2020' என்பதைத் தேர்ந்தெடுத்தால் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தளம் திறக்கும். முழுமையாக விண்ணப்பித்து முடிக்க மொத்தம் 10 படிகள் உள்ளன. விண்ணப்பிக்கத் தொடங்குபவர் முதலில் இந்த இணையதளத்தில் `Register' (பதிவு) செய்ய வேண்டும்.

இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்குப் பதிவு செய்ய வேண்டிய இணையதளம்.
இன்ஜினீயரிங் கவுன்சலிங்
இன்ஜினீயரிங் கவுன்சலிங்

முதல் பக்கத்தில் பெயர், தொலைபேசி எண், இ-மெயில் ஐ.டி, பிறந்தநாள், கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட வேண்டும். தகுதித் தேர்வில் தமிழ்நாடு மாநில வாரியத்தின் கீழ் படித்தவர் `HSC'யை தேர்வு செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ மாணவர்கள் அவர்தம் தேர்வை பதிவு செய்ய வேண்டும். எல்லா விவரங்களையும் கொடுத்து `Save' - ஐ அழுத்தினால் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) வரும். அதைப் பதிவு செய்தால் மட்டுமே இணையத்தில் உங்கள் விவரங்கள் பதிவாகும்.

இன்ஜினீயரிங் கவுன்சலிங்
இன்ஜினீயரிங் கவுன்சலிங்

அதன்பின் எப்போது வேண்டுமானாலும் `Login' செய்து தகவல்களைப் பதிவேற்ற முடியும். உங்களுடைய இ-மெயில் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்திற்குள் `Login' செய்யலாம்.

இன்ஜினீயரிங்
கவுனசிலிங்
இன்ஜினீயரிங் கவுனசிலிங்

உங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் விண்ணப்ப எண்ணை குறிப்பெடுத்துக்கொள்வது பின்நாளில் பயனளிக்கும்.

முதல் பக்கத்தில், பெற்றோரின் பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண், பாலினம், தாய்மொழி, சொந்த ஊர், நாடு, மதம், சாதி ஆகிய விவரங்களை பதிவுசெய்தபின் `save & continue' கொடுக்க வேண்டும். இரண்டாம் பக்கத்தில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.

இன்ஜினீயரிங்
கவுன்சலிங்
இன்ஜினீயரிங் கவுன்சலிங்

பொதுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர் எல்லாவற்றுக்கும் `இல்லை’ என்று பதிலளித்துவிட்டு, பக்கத்தின் இறுதியில் இருக்கும் பட்டியலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு அருகில் உள்ள மையத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

மூன்றாம் பக்கத்தில் பெற்றோரின் வேலை, ஆண்டு வருமானம் மற்றும் உதவித்தொகை விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். முதல் தலைமுறை பட்டதாரிக்கான உதவித்தொகையை அரசு அளிக்கிறது. இந்த உதவித்தொகை வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் குடும்பத்திலேயே பட்டப்படிப்பில் சேரும் முதல் ஆளாக இருக்க வேண்டும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பின்போது அரசு அளித்துள்ள முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம்.

இன்ஜினீயரிங்
கவுன்சலிங்
இன்ஜினீயரிங் கவுன்சலிங்

AICTE TFW என்பது நீங்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகம் அளிப்பதாகும். 6 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்டுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்பது எஸ்.சி, எஸ்.சி (அருந்ததியர்), எஸ்.டி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய எஸ்.சி, எஸ்.சி (அருந்ததியர்) ஆகிய பிரிவினருக்கு அரசால் வழங்கப்படுவது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்த பக்கத்தில் நீங்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படித்த பள்ளிகளின் விவரத்தை அளிக்க வேண்டும். ஐந்தாம் பக்கத்தில் தகுதித் தேர்வு (ப்ளஸ் டூ) விவரங்களான பதிவு எண் (ஹால் டிக்கெட் எண்), தேர்ச்சி வருடம், ப்ளஸ் டூ பாடப்பிரிவு மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றை பதிவிட வேண்டும். இந்த வருடம் அல்லது முந்தைய வருடம் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்ணையும் பதிவேற்ற வேண்டியிருக்கும். அடுத்த பக்கத்தில் நீங்கள் அளித்துள்ள அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.

இன்ஜினீயரிங்
கவுன்சலிங்
இன்ஜினீயரிங் கவுன்சலிங்
ஆகஸ்ட்16, 2020
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள்

எல்லா விவரங்களையும் சரிபார்த்து விட்டு விண்ணப்பத் தொகையை அளிக்க வேண்டும். க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலமாகப் பணத்தைச் செலுத்தலாம். பொது பிரிவினர் (பொது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) 500 ரூபாயும் எஸ்.சி, எஸ்.சி (அருந்ததியர்), எஸ்.டி பிரிவினர் 250 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற விவரங்கள்:

விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட்16-ம் தேதி இறுதி நாளாகும். ஜூலை 31-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும். ஆகஸ்ட் 21-ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

இன்ஜினீயரிங்
கவுன்சிலிங்
இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

செப்டம்பர் 7-ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டு 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். பொதுக் கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்கி நான்கு அல்லது ஐந்து சுற்றுகளாக ஆன்லைனில் நடைபெறும்.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!