ஒரு செயலுக்கான நம் கடின உழைப்பில், சரியான திட்டமிடல் என்பது மிகவும் அவசியம். திட்டமிடல் இல்லாத கடின உழைப்பு அருகில் இருக்கும் வெற்றியை கூட வெகுதூரம் தள்ளிவைக்கக் கூடும். இது குடிமை பணிக்காக UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இன்னும் கூட பொருந்திப்போகும்.

நாட்டின் கடினமான தேர்வாகக் கருதப்படும் இந்த குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று IAS, IPS அதிகாரிகளாக பணியில் சேர நம்மில் பலருக்கும் பேரார்வம் இருக்கும். ஆனால், அதற்கான கடின உழைப்பைக் கொடுக்க தயாராக இருக்கும் நாம் அத்தேர்வுக்கான திட்டமிடலை சரிவர செய்வதில்லை.
எந்தப் பாடங்களை தேர்வு செய்ய வேண்டும், தேர்வு செய்த பாடங்களை எவ்வாறு படிக்க வேண்டும், அதில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், தேர்வு நெருங்குகையில் நம் வியூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என இப்படி நாம் தேர்வுக்குத் தயாராகும் காலத்தில் செய்யப்படும் சரியான திட்டமிடலே பாதி வெற்றியை உறுதிசெய்துவிடும்.
இதுகுறித்த பல்வேறு சந்தேகங்களும் உங்களுக்கு இருக்கக்கூடும். உங்களுக்காக ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகெடமி இலவச பயிற்சி முகாம் ஒன்றை நடத்தவிருக்கிறது. UPSC, TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான இந்த ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் 1 வருட இலவச பயிற்சிக்கான Scholarship Test வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஞாயிற்றுகிழமை சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS மற்றும் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஆணையர் டாக்டர். தாரேஷ் அகமது IAS, திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர் சுபலக்ஷ்மி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து உங்கள் சந்தேகங்களை தீர்க்கவிருக்கிறார்கள்.
இந்த இலவசப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.