செமஸ்டர் தேர்வுகளுக்குப் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்கென புதிய இணையதளத்தை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
2021-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் பருவத் தேர்வுகளுக்கு பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக இந்தப் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் இன்று இரவு 7 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இணையதளத்தில் பதிவேற்றம் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 044-22357272, 7307, 7303 தொலைப்பேசி எண்களுக்கு மாணவர்கள் தொடர்பு கொண்டு பேசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், `ஏற்கெனவே தேர்வுகளுக்குப் பதிவு செய்த மாணவர்கள் இதில் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை, பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மட்டுமே இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.