வேலை + சைடு பிசினஸ்... வெற்றிகரமாகச் செய்யும் வழிகள்! - செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

பிசினஸில் வெற்றி பெற்றவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், அதிக அறிவு (IQ) கொண்டவர்கள் என்று நினைக்கிறோம். அது உண்மை அல்ல!
வேலை பார்த்துக்கொண்டே கூடுதல் வருமானத்துக்காக சைடு பிசினஸ் செய் கிறவர்கள் ஏராளம். பெண்கள், அவர்கள் பார்க்கிற முழுநேர வேலையைத் தாண்டி கூடுதல் வருமானத்துக்காகச் செய்யும் பகுதி நேர தொழில் குறித்து ‘சைடு ஹசில் இன் புராகிரஸ்’ (Side Hustle in Progress) என்னும் புத்தகம் விளக்குகிறது. யுனைடெட் கிங்டமில் வசிக்கும் எலிசபெத் ஒகாபி (Elizabeth Ogabi) எனும் பெண்மணி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

சைடு பிசினஸ் என்றால்..?
சைடு பிசினஸ் என்று புத்தக ஆசிரியர் குறிப் பிடுவது ஒருவருடைய முழுநேர பணியைத் தாண்டி செய்யும் ஒரு தொழிலை. ஒரு பகுதி நேர வேலையை அல்ல (நியூஸ் பேப்பர் போடுதல், வார இறுதியில் ஒரு கடையில் ஸ்டாக் எடுத்து தரும் வேலையைச் செய்தல் போன்ற) என்பதை புத்தக ஆரம்பத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். பார்க்கும் முழுநேர வேலையைத் தாண்டி மற்றொரு பகுதி நேர தொழிலை செய்ய நினைக்கும் பெண்களுக்கான புத்தகம் இது.
‘‘பெண்களின் தொழில்முனைவு குறித்த ஆய்வில் யுனைடெட் கிங்டமில் 6% பெண்களும், கனடாவில் 15% பெண்களும், அமெரிக்காவில் 11% பெண்களும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தில் 6% பெண்களும் சொந்தமாகத் தொழில் செய்கிறவர் களாக இருக்கின்றனர். 2017-ம் ஆண்டு நிலவரப்படி, யுனைடெட் கிங்டமில் சைடு பிசினஸ் செய்பவர்கள் (ஒட்டுமொத்த அளவில்) 72 பில்லியன் பவுண்டுகள் வருமானம் ஈட்டியுள்ளனர். பெண்கள் தொழில்முனைவு விகிதாசாரம் வளர்ச்சி அடைய வேண்டும் எனில், அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளும் ஆதரவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்’’ என்கிறார் ஆசிரியை.

தொழில்முனைவு என்பது பொழுதுபோக்கு அல்ல...
‘‘தொழில்முனைவோர் / நிறுவனர் என்று ஒருவர் இன்று தன்னை அழைத்துக்கொள்வது ஒரு பேஷனாக இருக்கிறது. தொழில்முனைவு என்பது மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தாலும் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. குறிப்பாக, வேகமாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியில்லை அது. நீங்கள் ஆர்வத்துடன் இருக்கிற ஒரு விஷயத்தை முயன்று பார்த்து லாபகரமாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியே அது. இந்த முயற்சியில் ஒரு சீரான கூடுதல் வருமானம் உங்களுக்கு வரலாம். அப்படிப்பட்ட அந்த வருமானம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன தைரியத்தையும் தரும்.
சைடு பிசினஸை வைத்துக்கொண்டு பில்லியனர் ஆக முடியாது. இணையம் பெரியளவில் பிரசித்திபெற்றுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருவதால், நம்முடைய சைடு பிசினஸை வேகமாக வாடிக் கையாளரிடம் கொண்டுபோய்விட முடியும் என்பது அனுகூலமான ஒன்றாக இருந்தாலும், அது உடனடியாக வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்துவிடாது. சரியான ஐடியா, சரியான முயற்சி மற்றும் சரியான உழைப்பு என்ற மூன்றும் சேர்ந்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
வெறும் பிசினஸ் ஐடியா மட்டுமே ஜெயிக்காது...
பயணம் செய்யும்போதோ, குளிக்கும்போதோ நமக்கு திடீரென்று ஒரு தொழில் குறித்த ஐடியா பளிச்சென மூளையில் உதிக்கும். அதைச் செயல்படுத்தினால் பிரமாண்டமான வெற்றி கிடைக்கும் என்று மனதில் தோன்றும். அது குறித்து தொடர்ந்து சிந்திப்பீர்கள். உறங்கும்போதும் இது குறித்த எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். உங்கள் நண்பர்களிடம் உங்களின் பிசினஸ் ஐடியா குறித்து விவாதிப்பீர்கள். ஆனால், இந்த பிசினஸ் ஐடியாக்கள் பெரும்பாலும் நம்முடைய மனதில் ஐடியாக்களாகவே இருந்து மறைந்துவிடும். இதற்குக் காரணம், இந்த ஐடியாவின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் அளவில் குறைபாடு என்பதில்லை; அந்த ஐடியாவை செயல் படுத்துவதில் இருக்கக்கூடிய இடைஞ்சல்களே ஆகும்.
உதாரணமாக, பிசினஸ் ஐடியாவெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இதைச் செயல்படுத்த என்னால் முடியுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கும். எங்கே ஆரம்பிப்பது என்பது பிடிபடாது. இதைச் செயல்படுத்த நமக்கு எங்கே நேரம் இருக்கிறது. அலுவலகப் பணி நம்முடைய நேரத்தை முழுமையாக எடுத்துக்கொள்கிறதே என்கிற எண்ணம் இருக்கும். ‘ஐடியா ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால், இது ஜெயிக்குமா’ என்கிற தயக்கமும் பயமும் சேர்ந்து அந்த ஐடியாவை செயல்படுத்த விடாமல் தடுத்துவிடும். இந்த பயத்தை விட்டொழித்து நமக்கு தோன்றும் பிசினஸ் ஐடியாவை செயல்படுத்த முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன?
அந்த பிசினஸ் ஐடியாவுக்குத் தேவையான விஷயத்தை சின்னச் சின்னதாக / ஒவ்வொன்றாகச் செயல்படுத்துவதுதான். வெறுமனே பிசினஸ் ஐடியாவை மனதில் சுமக்காமல் அதைச் செயலாக்கும் முயற்சிகளை அன்றாடம் மிகச் சிறிய அளவில் செய்ய ஆரம்பித்தாலுமே நாளடைவில் அந்த முயற்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுடைய சைடு பிசினஸ் முயற்சியை வெற்றிகரமானதாக உருவாக்கி நிலைநிறுத்திவிடும்’’ என்கிறார் ஆசிரியர்.
சின்னதாக ஆரம்பியுங்கள்...
இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டவையே என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தற்போதிருக்கும் இடத்தில் இருக்கும் நிலையில் இருந்துகொண்டே உங்களுடைய சைடு பிசினஸை ஆரம்பிப்பது எப்படி என்பதை பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
‘‘பெண்கள் செய்யும் தொழில்முனைவில் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என்ற இரண்டின் பங்களிப்பு மிகவும் பெரியதாக இருக்கிறது என்பதால், பயணத்தை ஆரம்பிக்கும்முன்பே இந்த இரண்டையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்தி லேயே ஆசிரியை வலியுறுத்து கிறார். உங்கள் ஐடியா எவ்வளவு சூப்பராக இருந் தாலுமே உடல் மற்றும் மன ஆரோக்கியம் சரியாக இல்லை எனில், உங்களால் அந்த ஐடியாவை வெற்றிபெற வைக்க முடியாது.
அறிவாளிகள்தான் ஜெயிக்க முடியுமா?
பொதுவாக, பிசினஸில் வெற்றி குறித்து நாம் என்ன நினைக்கிறோம்? வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், அதிக அறிவு (IQ) கொண்டவர் கள் என்றுதானே நினைக்கிறோம். ஆனால், நடப்பில் இது உண்மையில்லை. தொழிலில் வென்றவர்கள், தலைவர்கள், புதிய விஷயங் கள் கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்களிடம் எது அவர்களை வெற்றிபெற வைத்தது என்று தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பின்வரும் கேள்விகளை என்னுடைய பிராட்காஸ்ட்டு களில் நான் கேட்பேன்.
இந்தக் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் இரண்டு தான். ஒன்று, திறமை, மற்றொன்று, தைரியம் நூற்றுக் கணக்கான தொழில்முனை வோர்களை நேர்காணல் செய்தபின் நான் கண்டறிந்தது என்ன தெரியுமா? இவர்கள் அனைவருமே ஒரு சில தடவை தோற்றாலுமே மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி களைச் செய்தனர் என்பதைத் தான்.
எனவே, ஒரு தொழிலில் வெற்றி பெற அந்தத் தொழில் குறித்த அனைத்து விஷயங் களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தில்லை. அதிபுத்திசாலி யாகவும் இருக்க வேண்டிய தில்லை. ஐடியா சரியாக இருக்கிறபட்சத்தில் எது வந்த போதும் அந்தத் தொழிலை விட்டு விலகாமல் கற்றுக் கொண்டு, ஒருவேளை தோற்றால் மீண்டும் முயற்சி செய்து பார்க்கும் மனநிலை யைக் கொண்டிருத்தலே வெற்றிக்கு வழிவகை செய்யும் முக்கிய காரணியாக இருக் கிறது.
ஒரு ஐடியாவை தொழிலாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவது வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, இந்த நடைமுறையில் நீங்கள் எந்த மாதிரியான அனுபவங் களைப் பெறுகிறீர்கள் மற்றும் எந்த மாதிரியான நபராக உருவெடுக்கிறீர்கள் என்பது தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதுதான் இந்த விஷயத்தில் நடக்கிற மிகச் சிறந்த சுய முன்னேற்றம். தோல்வியின் ஆரம்பம் சுய நம்பிக்கை இல்லாமல் செயல்படுவதிலும் வெற்றிக்கான ஆரம்பம் அபரிமித மான சுயநம்பிக்கையிலுமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் நம்பி, அந்த நம்பிக்கையை உணர்ந்து செயலாற்றத் தொடங்கும்போதே வெற்றி என்பது நம்பிக்கைக்குக் கிடைக்கிறது’’ என்று சொல்லும் ஆசிரியர், எப்படி சுய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்கமாகக் கூறியுள்ளார்.
சைடு பிசினஸ்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
எப்படி நம்முடைய திறமை, கையில் இருக்கும் உபரியான நேரம் மற்றும் நம்முடைய ஈடுபாட்டுக்கு ஏற்ற சைடு பிசினஸைத் தேர்வு செய்வது, தேவைப் படும் பணம் எவ்வளவு என்பதை எப்படிக் கணக்கீடு செய்வது, பார்க்கிற முழுநேர வேலைக்கும் சைடு பிசினஸுக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது, எப்படி இரண்டு பணிகளுக்கும் அர்ப்பணிப்புடன் நடந்துகொள்வது, மென்டார் களைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், இருக்கிற நேரத்தை எப்படி சிறப்பாக உபயோகப் படுத்திக்கொள்வது, எப்படி ஐடியாவை தொழிலாக மாற்றி பணத்தை சம்பாதிப்பது, முதல் வாடிக்கை யாளரை எப்படிப் பெறுவது, எப்படி விரிவாக்கத்துக் கான நிதியைப் பெறுவது என்பது போன்ற பல்வேறு சைடு பிசினஸ் சார்ந்த விஷயங்களை விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாத்தின் இறுதியிலும் வெற்றி பெற்ற ஒருவரின் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற அவர் கடைப் பிடித்த விஷயங்களை விரிவாக விளக்கியுள் ளார் ஆசிரியர். சைடு பிசினஸில் பெண்கள் வெற்றி பெறத் தேவைப் படும் அத்தனை விஷயங் களையும் தெளிவாகத் தந்திருக்கும் இந்தப் புத்தகத்தை சைடு பிசினஸ் செய்ய நினைக்கும் அனைவரும் ஒருமுறை படித்து பயன் பெறலாம்.