கட்டுரைகள்
Published:Updated:

“தொடர் முயற்சியே வெற்றிக்கான மந்திரம்!”

இலவசப் பயிற்சி முகாம்
பிரீமியம் ஸ்டோரி
News
இலவசப் பயிற்சி முகாம்

ஒருவரின் கனவைத் தடுக்க பல சூழ்நிலைகள் பிறக்கும். ஆனால், அவற்றைக் கடந்து எதையும் வெற்றிகொள்வதில்தான் சவாலே இருக்கிறது. இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெற ஆர்வம் மட்டும் போதாது.

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்திய UPSC/TNPSC Group-I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம் ஏப்ரல் 30-ம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிங்மேக்கர்ஸ் அகாடமி வழங்கும் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான தேர்வுடன் தொடங்கிய முகாமில் ஊக்க உரை அளித்தார் திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியராகப் பயிற்சியில் இருக்கும் செல்வி. சுபலட்சுமி.

UPSC/TNPSC Group-I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம்
UPSC/TNPSC Group-I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம்

“மேடையின் அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கத்துக்கு வர கடின உழைப்பு மிகவும் அவசியம். அதன், அடித்தளமே இந்த நிகழ்வு. UPSC தேர்வுக்குப் படிப்பவர்கள், TNPSC தேர்வையும் எழுதுங்கள், எதையும் விட்டு வைக்காதீர்கள். இப்படிச் செய்வது தேர்வு குறித்த உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். வெற்றி, தோல்வியைத் தாண்டி, பங்கேற்பது அவசியம். விதை விதைத்தவுடன் எப்படி அறுவடை செய்ய முடியாதோ, அதேபோல இத்தேர்வுகளில் நமக்கு அத்தனை எளிதில் வெற்றி கிடைத்துவிடாது. நம் வேர்களை சரிசெய்து ஆழப்படுத்திய பின்பே நம் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்” என்று பேசிய அவர், TNPSC தேர்வுகளுக்குத் தயாராகும் வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

“தொடர் முயற்சியே வெற்றிக்கான மந்திரம்!”

அடுத்ததாக சிறப்புரையாற்றினார், பெருநகர சென்னை மாநகராட்சியின் (வடக்கு) வட்டார இணை ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன் IAS. “ஒருவரின் கனவைத் தடுக்க பல சூழ்நிலைகள் பிறக்கும். ஆனால், அவற்றைக் கடந்து எதையும் வெற்றிகொள்வதில்தான் சவாலே இருக்கிறது. இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெற ஆர்வம் மட்டும் போதாது. தொடர்ந்து முயற்சி செய்வதே வெற்றிக்கான மந்திரம்” என்ற அவர், தொடர்ந்து வாழ்வில் தான் சந்தித்த சவால்கள், ஐ.ஐ.டி-யில் மேற்படிப்பு படித்து மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றும் குடிமைப் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என பலவற்றைப் பற்றியும் மாணவர்களிடம் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்தார்.

இதன்பிறகு பேசிய கிங்மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் திரு. சத்ய பூமிநாதன் குடிமைப்பணித் தேர்வுகள் குறித்த முழுமையான விளக்கத்தை அளித்தார். எந்தப் பாடத்தை எப்படிப் படிக்க வேண்டும், TNPSC மற்றும் UPSC தேர்வுகளின் பாடத்திட்டங்கள் என்ன, வீட்டில் இருந்து படிப்பது எப்படி, இதில் பயிற்சி நிலையங்களின் பங்கு என்ன என அனைத்தையும் பற்றிப் பேசினார். இறுதியாக கேள்வி பதில் பகுதிக்குப் பிறகு ஸ்காலர்ஷிப் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.