தென்னிந்தியாவின் முதன்மை யான ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான GRT ஜூவல்லர்ஸ் 1964-ஆம் ஆண்டு முதலே நுட்பத்துடன் கூடிய பாரம்பரிய மற்றும் நவனீ தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் கலையில் முன்னணியில் இருந்து வந்துள்ளது. GRT ஜூவல்லர்ஸ் சமுதாயத்தின் நெறிமுறை களின் மீதான புரிதலுடனும் , நம்பிக்கையுடனும், நமது அடிமட்ட மற்றும் உயர்மட்ட சமுதாயத்திற்கு வலுசே ர்க்கும் தூண்களுக்கு தனதுபங்களிப்பு வழங்குவதை ஒரு குறிக்க கோளாக நம்புகிறது. ரத்தினங்களை காண்பது மிகவும் அரிது என கூறக் கேட்டிருக்கிறோம். அதுபோல GRT ஜூவல்லர்ஸ் நிறுவனமும் அது வடிவமைக்கும் ரத்தினக் கற்களைப் போலவே மிகவும் அபூர்வமான ஒன்று என்பது குறிப்பிடத்ததக்கது! ஆகவே , இவ்விரண்டுமே வியப்பூட்டும் விதத்தில் ஜொலிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை .

பல ஆண்டுகளாக, GRT ஜூவல்லர்ஸ் உதவி தேவைப்படுபவர்களுக்கு தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டி வருகிறது. இப்போது அந்த பாரம்பரியத்தை தொடரும் வகையில் GRT ஜூவல்லர்ஸ் சமுதாயத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவிலுள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இதற்காக 1000த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்ததில் 71 மாணவர்கள் GRT ஜூவல்லர்ஸ் வழங்கும் உதவித் தொகை பலனைப் பெற்றுள்ளனர். முதல் செமஸ்டருக்காக மொத்தம் ரூ.25 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையானது தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. GRT ஜூவல்லர்ஸ் இந்த கல்வி உதவித் தொகையை இரண்டாவது செமஸ்டருக்கும் தொடர்ந்து வழங்க முனைப்புடன் உள்ளனர். மேலும், இந்த மாணவர்கள் தங்கள் முதுநிலைக் கல்வியை நிறைவு செய்யும் வரையில் தொடர்ந்து இந்த உதவித்தொகையை வழங்கும் வகையில் இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
ஒரு மாணவருக்கான கல்வி உதவித் தொகையானது அந்த மாணவரின் குடும்ப பொருளாதார நிலை முதல் பட்டப்படிப்பு, அரசு உதவித் தொகை மற்றும் இதர நிதியாதரவு ஆகிய பல விபரங்களை பரிசீலனை செய்த பிறகே நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அந்த மாணவர் +2 படிப்பை குறிப்பிட்ட மதிப்பெண்களுடன் நிறைவு செய்து குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் 22-23 தமிழ்நாட்டில் இளைநிலை படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும் இந்த கல்வி ஆண்டில் உதவித் தொகையானது தமிழ்நாட்டில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரி படிப்பிற்கும் பொருந்தும்

இந்த சிறப்பான தருணத்தில் GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள், "கைவினைத்திறனுடன் கூடிய உருவாக்கமாக இருந்தாலும் சரி ஆதரவுக்கரம் நீட்டும் விதத்திலும் சரி, GRT ஜூவல்லர்ஸ் எப்போதுமே ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பொன்னான தருணங்களில் உடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் செய்துவருகிறது. கல்வி உதவித்தொகை என்ற நீண்ட காலம் நீடித்து வரும் ஒரு பாரம்பரியத்தை தொடர்வதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்.
GRT ஜூவல்லர்ஸ் மேலாண்மை இயக்குநர் திரு.G.R. ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து பேசும்போது, " மகிழ்ச்சிக்கு அது பகிரப்படும்போது மட்டுமே மதிப்பு ஏற்படுகிறது. சமுதாயத்திற்கான இந்த சிறு பங்களிப்பை வழங்குவதன் மூலம் எங்கள் வாழ்க்கை யில் என்றெ ன்றும் மகிழ்ச்சியை அளித்துவரும் எங்கள் வாடிக்கை யாளர்களுக்கு எங்களது உளங்கனிந்த நன்றியை தெ ரிவிக்கின்றோம்’’ என்றார்.