Published:Updated:

2022 UPSC இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய மற்றும் மாநில அளவில் சாதித்தவர்களின் பட்டியல்!

2022 UPSC இறுதித் தேர்வு முடிவுகள்

2022ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Published:Updated:

2022 UPSC இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய மற்றும் மாநில அளவில் சாதித்தவர்களின் பட்டியல்!

2022ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

2022 UPSC இறுதித் தேர்வு முடிவுகள்
2022ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் IAS-180, IPS-200, IFS-38, குரூப் A-473, குரூப் B-131 உள்ளிட்ட 1022* காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் வெளியான தேர்வு முடிவுகளில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது.

UPSC தேர்வு முடிவுகள்
UPSC தேர்வு முடிவுகள்
இஷிதா கிஷோர்
இஷிதா கிஷோர்

இதில் இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவிலான முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அடுத்தடுத்து கரிமா லோஹியா, உமா ஹாரதி, ஸ்மிருதி மிஸ்ரா என முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, மயூர் ஹசாரிகா, கஹானா நவ்யா ஜேம்ஸ், வசீம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரின் மகளான ஜீஜீ என்ற மாணவி முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று தமிழ்நாடு அளவில் முதலிடமும், இந்திய அளவில் 107வது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஜீஜீ
ஜீஜீ

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 107வது இடத்தை பிடித்துள்ளார். புதுக்கோட்டையில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வரும் சரவணன் என்பவர் 147வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அரசுப் பணிகளில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களுக்கும் விரைவில் வெற்றி சாத்தியமாக வாழ்த்துகள்!