ஆனந்த விகடனின் ‘நாளை என்ன வேலை?’ தொடரில் இந்தியாவில் உள்ள முக்கிய நுழைவு தேர்வுகள் குறித்து கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் மற்றும் ரமேஷ் பிரபா ஆகியோர் கலந்துரையாடினர். அவ்வுரையாடலின் சிறிய பகுதி இதோ,
JEE தேர்வின் நோக்கம் என்ன?
JEE என்பது மத்திய அரசின் கீழ் வரக்கூடிய தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு.
தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் காரைக்காலில் NIT-க்கள் உள்ளன. இவை ஒரு காலத்தில்ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் இருந்தன. இந்தியாவில் இதற்கு முன்னர் AIEEE (ALL INDIA ENGINEERING ENTRANCE EXAMINATION) நடைமுறையில் இருந்தது. தற்போது மத்திய அரசின் கீழ் வரக்கூடிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்க விரும்புபவர்கள் JEE என்ற இந்த நுழைவுத்தேர்வு மூலமே தகுதிபெற முடியும். இந்தியாவில் மத்திய அரசின் கீழ் மொத்தம் 31 NIT-க்கள், 29 அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 26 IIIT (INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY) உள்ளன.
IIIT என்றால் என்ன ?
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி பல்வேறு துறைகள் அதாவது மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்… போன்றவற்றில் தொழில்நுட்பத்தை எப்படி கொண்டு போகலாம் என்பவை சம்பந்தப்பட்டது. பப்ளிக் ப்ரைவேட் பார்ட்னர்ஷிப்பில் இக்கல்வி நிலையங்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
ஒரு காலத்தில் இத்தேர்வை சி.பி.எஸ்.சி நடத்திக் கொண்டிருந்தது தற்போது National Testing Agency நடத்துகிறது. பாடத்திட்டம் பொதுமைப்படுத்தப்பட்டு இருக்கிறதா?
சிபிஎஸ்இ-யிடம் இருக்கும்போதே பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டது. முன்னாள் UGC சேர்மன் பேராசிரியர் யஷ்பால் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருந்தால், அவர்களை ஒரு யூனிட்டிற்கு கொண்டுவர முடியாது என்று கூறி நேஷனல் கரிக்குலம் பிரேம் ஒர்க் என்ற ஒன்றை 2005-ல் கொண்டு வந்தார். அதன் மூலம் அனைத்து மாநிலங்களும் ஒரே பாடங்களை படித்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு சிஸ்டம் உள்ளது. இதே ஆந்திரா, மகாராஷ்டிராவில் ஜூனியர் காலேஜ் என்று கூறுவார்கள். ஒரு மாநிலத்தில் 11ஆம் வகுப்பில் படிப்பது இன்னொரு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பர். அதனால் இந்த இரண்டு வகுப்பின் பாடத்திட்டங்களையும் சேர்த்துதான் எல்லா நுழைவுத் தேர்வுகளிலும் கேள்விகள் கேட்பார்கள். பாடத்திட்டம் என்பது பொதுவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
JEE Main கணினி வாயிலாக நடத்தப்படும் தேர்வு. ஆனாலும் தனியாக ஒரு தேர்வு மையம் அமைக்கப்படுகிறது ஏன்?
TCS போன்ற பெரிய கம்பெனிகள் இந்த முறையை தான் பின்பற்றுகின்றனர். வடமாநிலங்களில். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததையடுத்து இந்த முறை பின்பற்றப்படுகிறது.
முறைகேடுகளைத் தடுக்கவே இந்த சிஸ்டம் கொண்டு வரப்பட்டது.
NIT-யில் சிறந்த நிறுவனமாக எந்த நகரில் உள்ளதை கூறலாம் ?
மொத்தமுள்ள 31 NIT-களில் 15 மட்டுமே தேரும்.
NIT மகாராஷ்டிரா, NIT திருச்சி ஆகியவை சிறந்தவை.
ரேங்கிங், ரேட்டிங் ஆகியவற்றை மட்டுமே நீங்கள் பார்க்கக் கூடாது. அனைத்து கோச்சிங் சென்டர்களுமே ஐ.ஐ.டியில் அதிகம் ரேங்க் வாங்கினார்கள் என்ற பட்டியலை மட்டுமே காட்டும். அதன் அடிப்படையில்இல்லாமல் ஐ.ஐ.டியில் எத்தனை மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும .