Published:Updated:

தொல்லியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்கலாமா, தகுதிகள் என்ன? | Doubt of Common Man

தொல்லியல் துறை
News
தொல்லியல் துறை

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையின் மூலம் 1974-ம் ஆண்டு முதல், ஒரு வருட கால அளவிலான கல்வெட்டுக்கலை மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வந்தது.

Published:Updated:

தொல்லியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்கலாமா, தகுதிகள் என்ன? | Doubt of Common Man

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையின் மூலம் 1974-ம் ஆண்டு முதல், ஒரு வருட கால அளவிலான கல்வெட்டுக்கலை மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வந்தது.

தொல்லியல் துறை
News
தொல்லியல் துறை

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் வாசு என்ற வாசகர், "தொல்லியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு குறித்துக் கூற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

doubt of common man
doubt of common man

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டாண்டு கால அளவிலான தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Archaeology) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தொல்லியல் நிறுவனம்

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையின் மூலம் 1974-ம் ஆண்டு முதல், ஒரு வருட கால அளவிலான கல்வெட்டுக்கலை மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Epigraphy and Archaeology) வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொல்லியல் நிறுவனம் (Institute of Archaeology) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், மாநிலத்தின் தொல்லியல் மற்றும் மரபுரிமையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில், தொல்லியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Archaeology) என்று புதிய படிப்பாகவும், இரண்டாண்டு காலமாகவும் உயர்த்தப்பட்டது.

தமிழக அரசின் தொல்லியல் துறை இணையதளம்
தமிழக அரசின் தொல்லியல் துறை இணையதளம்

2020 - 2021-ம் கல்வியாண்டு முதல் இப்பட்டயப்படிப்புக்கான பாடத்திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்டங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களைக் கொண்டு செயல்முறை வகுப்புகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், இந்நிறுவனம் புகழ்பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தரமான கல்வியை வழங்குவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

கல்வித்தகுதி

இப்பட்டயப்படிப்புச் சேர்க்கைக்கு கலை/அறிவியல்/பொறியியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு ஒன்றில் 55% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு பயிற்று மொழிகளில் கற்பிக்கப்படும் இப்பட்டயப்படிப்பில் மொத்தம் 20 இடங்கள் இருக்கின்றன.

விண்ணப்பம்

இப்பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்தப் பத்தியின் கீழ் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாக நிரப்பி, கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, “ஆணையர் (மு.கூ.பொ), தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600008” எனும் முகவரிக்கு 16-9-2021 ஆம் நாள், மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் கீழே
download

மாணவர் சேர்க்கை

விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பெற்று மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும். இப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000/- பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படும்.

பாடத்திட்டம்

தொல்லியல், தொல்லியல் அறிமுகம்: கோட்பாடுகள் மற்றும் முறைகள், மனிதப் பரிணாமம் மற்றும் வரலாற்றுக்கு முந்தையத் தொல்லியல், வேளாண்மையின் தொடக்கம் மற்றும் வரலாற்றுத் தொல்லியல், இந்திய அரசியல் வரலாறு (கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 16 ஆம் நூற்றாண்டு வரை), இந்திய கட்டடக்கலை / தென்னிந்திய கட்டடக்கலை, வரலாறு மற்றும் ஆராய்ச்சி முறை, கல்வெட்டுக்கலை மற்றும் பண்டைய எழுத்து முறை, வட இந்தியக் கட்டடக்கலை, தென்னிந்தியக் கட்டடக்கலை, இந்திய நாணயவியல் மற்றும் அருங்காட்சியகம், பாரம்பரிய மேலாண்மை மற்றும் பாதுகாப்பு - பழங்கால இந்தியாவின் பழங்காலச் சட்டங்கள், பண்டைய இந்தியாவில் சமூகம் மற்றும் பொருளாதாரம், இந்தியப் படிமவியல், தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு (கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 16-ம் நூற்றாண்டு வரை), கடல்சார் தொல்லியல், தொல்லியல் அறிவின் பயன்பாடு, பண்டைய அறிவியல் மற்று, தொழில்நுட்பம் ஆகியவை இந்தப் பட்டயப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தொல்லியல் துறை
தொல்லியல் துறை

இப்பட்டயப்படிப்பிற்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கு தொல்பொருள் ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு மற்றும் நாணயவியல், தொல்பொருள் பாதுகாப்பு, ஆவணங்கள் மற்றும் தொல்பொருட்களின் காட்சி, பொதுத் தொல்பொருள், எண்ணிமத் தொல்பொருள் போன்ற துறைகளில் நடைமுறைப் பயிற்சி அளிக்கப்பட்டு, இறுதியாக ஒரு விரிவான திட்டப்பணி ஒதுக்கப்படும் என்று தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்

இப்பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் https://tnarch.gov.in/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் 044-28190020 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது tnarchioa2021batch@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டும் பெறலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man
doubt of common man