Published:Updated:

Geology படிப்பு பற்றியும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூற முடியுமா? | Doubt of Common Man

Jobs related to geology
News
Jobs related to geology

குடிமைப் பொறியியல், சுரங்கப் பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்நுட்பம் போன்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் நிலவியலை முதன்மைப்பாடமாகக் கொண்ட படிப்புகளும் இருக்கின்றன.

Published:Updated:

Geology படிப்பு பற்றியும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூற முடியுமா? | Doubt of Common Man

குடிமைப் பொறியியல், சுரங்கப் பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்நுட்பம் போன்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் நிலவியலை முதன்மைப்பாடமாகக் கொண்ட படிப்புகளும் இருக்கின்றன.

Jobs related to geology
News
Jobs related to geology
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் சுஜாதா என்ற வாசகர், "Geology படிப்பு பற்றியும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

பூமியினுள் புதைந்து கிடக்கும் தங்கம், இரும்பு, செம்பு, யுரேனியம் போன்ற உலோகங்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு, நீர், நிலக்கரி, இரத்தினக் கற்கள், கல்நார், மைக்கா, களிமண், படிகக்கல், சிலிக்கா போன்ற பல்வேறு கனிமப்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களை அடையாளம் காணவும், அவற்றைப் பூமியிலிருந்து பிரித்து எடுத்துப் பயனடைவதற்குமான அறிவியலாக நிலவியல் (Geology) இருக்கிறது. இதேபோன்று, பூகம்பம், ஆழிப்பேரலை (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற பூமியில் புதைந்து கிடக்கும் தொன்மையை மீட்டெடுக்கும் தொல்லியல் ஆய்வுகள் போன்றவற்றுக்கான அடிப்படை அறிவியலாகவும் நிலவியல் இருந்துவருகிறது.

படிப்புகள்

புவியியலின் ஒரு பிரிவான நிலவியல் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பு (B.Sc., Geology), முதுநிலைப் பட்டப்படிப்பு (M.Sc., Geology, Geo - Informatics), பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயப்படிப்புகள் (Diploma & Post Graduate Diploma Courses), முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகள் (Ph.D Geology) போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
Jobs related to Geology
Jobs related to Geology

செயல்முறை நிலவியல் (Applied Geology), செயல்முறை நிலவியல் மற்றும் புவித்தகவலியல் (Applied Geology and Geoinformatics), நிலவியல் மற்றும் வள மேலாண்மை (Earth Science and Resource Management), புவி அறிவியல் (Earth Science), சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) போன்ற சிறப்புப் பிரிவுகளிலும் நிலவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவை தவிர, நிலவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் பொருளாதார நிலவியல் (Economic Geology), நில வேதியியல் (Geochemistry) நில இயற்பியல் (Geophysics), கடல் நிலவியல் (Marine Geology), பொறியியல் நிலவியல் (Engineering Geology), கட்டமைப்பு நிலவியல் (Structural Geology), எரிமலை (Volcanology), கனிமவியல் (Mineralogy), நில வடிவியல் (Geomorphology), புவி அமைப்புகள் (Earth Systems), கட்டமைப்பு நிலவியல் (Structural Geology), நில அறிவியல் (Geoscience), பெருங்கடல் அமைப்புகள் (Ocean systems), வண்டல் இயல் (Sedimentology), பழங்காலவியல் (Paleontology), நில இயக்கவியல் (Geodynamics) எனும் சிறப்புப் பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

குடிமைப் பொறியியல், சுரங்கப் பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்நுட்பம் போன்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் நிலவியலை முதன்மைப்பாடமாகக் கொண்ட படிப்புகளும் இருக்கின்றன. இவை தவிர, பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுடன் தொடர்புடைய கல்வியுடன் நிலவியல் பயன்பாடுகளுக்கான தொலையுணர்வு அறிதல் (Remote Sensing for Geology Applications), நிலச்சரிவின் ஆபத்து மண்டலம், கண்காணிப்பு மற்றும் மாதிரியாக்கம், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (Hazard zonation, monitoring and modeling of Landslide and support to early warning system), மாறிவரும் காலநிலையின் கீழ் இமயமலை குறித்த ஆய்வுகள் (Himalayan Cryospheric Studies under Changing Climate) உட்பட பல்வேறு நிலவியல் சிறப்புப் படிப்புகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும் நிலவியல் தொடர்பான 914 வகையான படிப்புகள் இருக்கின்றன.

Jobs related to Geology
Jobs related to Geology

மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் பிரசிடென்சி கல்லூரி (சென்னை), ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி (திருநெல்வேலி), தேசியக் கல்லூரி (திருச்சிராப்பள்ளி), அரசுக் கலைக்கல்லூரி (சேலம்), வ.உ.சிதம்பரனார் கல்லூரி (தூத்துக்குடி), அ. து. ம. மகளிர் கல்லூரி (நாகப்பட்டினம்), பாவை மகளிர் கலை அறிவியல் கல்லூரி (நாமக்கல்) உள்ளிட்ட சில கல்லூரிகளில் நிலவியல் இளநிலைப் பட்டப்படிப்பு (B.Sc.,Geology) இடம்பெற்றிருக்கிறது. 10 +2 தேர்வில் அறிவியல் பாடத்தினை எடுத்துப் படித்த மாணவர்கள், மதிப்பெண் அடிப்படையில் இப்படிப்பிற்கான சேர்க்கையினைப் பெற முடியும்.

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் நிலவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு (M.Sc., Geology, Applied Geology, Geo-Informatics) நிலவியல் இளநிலைப் பட்டப்படிப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புபனேசுவர், மும்பை, காரக்பூர், தான்பாத், ரூர்கி ஆகிய இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இடம்பெற்றிருக்கும் நிலவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நிலவியல் இளநிலைப் பட்டப்படிப்புத் தேர்ச்சியுடன், முதுநிலைப் படிப்புகளுக்கான இணை சேர்க்கைத் தேர்வு (Joint Admission test for Masters) எழுதித் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்

மிகப்பெரும் கட்டுமானத் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாகக் கட்டடத்துக்கான அடித்தளங்கள் அமைப்பதற்கு முன் தளத்தை ஆய்வு செய்வதற்கும், மண் உறுதிப்பாட்டை அறிந்து கொள்வதற்கும் நிலவியல் பொறியாளர்கள் (Engineering Geologist) தேவையாக இருக்கிறது. இதே போன்று, கட்டுமானத் திட்டங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடவும், அனைத்து வகையான கழிவுகளையும் அகற்றுவதற்கும் சுற்றுச்சூழல் நிலவியலாளர்களின் (Environmental Geologist) தேவை இருக்கிறது.

நீர் வள ஆதாரங்களை மதிப்பீடு செய்து, நீர் மாசுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றி, நீரைத் தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ள நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான நில நீரியலாளர்கள் (Geo-Hydrologist) தேவை இருக்கிறது. மண் அரிப்பு, கடல் அரிப்பு, பனிப்பாறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதற்கான நிலவியல் வல்லுநர்கள் (Geomorphologists) தேவையும் இருக்கிறது.

Geology
Geology

புவியினுள் மறைந்திருக்கும் நீர் மற்றும் கனிம வளங்களை அடையாளம் கண்டு, அதனை அளவிடுவதுடன் பகுப்பாய்வு செய்து விலை மதிப்பற்ற கனிம வளங்களை மக்கள் பயன்பாட்டிற்காகத் தோண்டி எடுத்துத் தொழில்கள் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நீரியலாளர்கள் மற்றும் கனிமயியலாளர்கள் (Hydrologists and Mineralogist) தேவை இருக்கிறது.

கடலின் இயற்பியல் தன்மைகளை ஆய்வு செய்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் மீன்பிடி தொழிலுக்கு ஆதாரமாகச் செயல்படவும் கடல் நிலவியலாளர்கள் (Marine Geologist) தேவை இருக்கிறது.

உலகின் முதன்மைத் தேவையாக இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil And Natural Gas) இருக்கும் இடங்களை நிலம், கடல் மற்றும் கடல் தளங்களில் ஆய்வு மேற்கொண்டு

கண்டறியும் பணிக்கு பெட்ரோலிய நிலவியலாளர்களின் (Petroleum Geologist) தேவை அதிகமாக இருக்கிறது.

ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற தொன்மையான இடங்களை அகழாய்வு செய்து பழைமையின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கும், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதைபடிமங்களைக் கண்டறிந்து அவற்றின் பரிணாம வளர்ச்சி, பூமியில் அவற்றின் இருப்பு போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் புதைபடிம ஆய்வாளர்கள் (Paleontologist) தேவையும் இருக்கிறது.

பூமியின் அடுக்குகளை ஆய்வு செய்து, நில அதிர்வுகள் மற்றும் நில அதிர்வு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து அங்கு அதிக இழப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிகை நடவடிக்கைகளுக்கு உதவும் நில அதிர்வு வல்லுநர்கள் (Seismologist) தேவை இருக்கிறது.

நிலம் மற்றும் கடலிலுள்ள படிவுப்பாறைகளை ஆய்வு செய்து, அதன் அடுக்குகளை அறிந்துகொள்ளவும், அதனைப் பகிர்ந்து கொள்வதற்கும் பாறை அடுக்கியல் ஆய்வாளர் (Stratigrapher) தேவை இருக்கிறது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நிலவியல் குறித்துக் கற்பித்தல், நிலவியல் கல்வி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கான நிலவியலாளர்கள் (Geologist) தேவை இருக்கிறது.

மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்புகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் ஆலோசகர் (Environmental Consultant), தொலையுணர் திறன் வல்லுநர் (Remote Sensing Specialist), நிலத்தடி நீர் வல்லுநர் (Groundwater Specialist), சுரங்கம் அல்லது கடல் பொறியாளர் (Mining or Marine Engineer), சுற்றுச்சூழல் அறிவியலாளர் (Environmental Scientist), கடல் நிலவியலாளர் (Marine Geologist), பெட்ரோலியப் பொறியியலாளர் (Petroleum Engineer), நில வேதியியலாளர் (Geochemist), நில இயற்பியலாளர் (Geophysicist), பெருங்கடலியலாளர் (Oceanographer), சுற்றுச்சூழல் வழக்குரைஞர் (Environmental Lawyer) என்பது போன்ற சில பணிகளுக்கான தேவையும் இருக்கிறது.

Jobs related to Geology
Jobs related to Geology
நிலவியல் துறையில் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளிலான பெட்ரோலியம், சுரங்கம் மற்றும் கனிம வளம், சுற்றுச்சூழல், பொறியியல் உள்ளிட்ட பெரும் கூட்டாண்மை நிறுவனங்களில் (Corporate) அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதேபோல், சுற்றுச்சூழல், திட்டமிடல் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட சேவை அமைப்புகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பணிகள் இருக்கின்றன.

மேலும் இந்திய மற்றும் மாநில அரசுகளில் உள்ளூர் மற்றும் பிராந்தியத் திட்டமிடல், மத்திய, மாநிலச் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், நிலவியல் பொறியியல், மத்திய, மாநில நில அளவை அமைப்புகள், தேசியப்பூங்காக்கள், மாநிலப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வகையான அரசுப் பணிகளும் இருக்கின்றன.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man