Published:Updated:

முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்துக் கூற முடியுமா? | Doubt of Common Man

வேலைவாய்ப்பு
News
வேலைவாய்ப்பு

'முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்னென்ன' என்ற நம் வாசகரின் கேள்விக்கு வழிகாட்டுகிறார் 'ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி'யின் நிறுவனர் டாக்டர் ஆர்.ராஜராஜன்.

Published:Updated:

முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்துக் கூற முடியுமா? | Doubt of Common Man

'முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்னென்ன' என்ற நம் வாசகரின் கேள்விக்கு வழிகாட்டுகிறார் 'ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி'யின் நிறுவனர் டாக்டர் ஆர்.ராஜராஜன்.

வேலைவாய்ப்பு
News
வேலைவாய்ப்பு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சுரேந்தர் என்ற வாசகர், "முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்துக் கூற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

எல்லா துறையிலும் வேலை வாய்ப்பின்மை எனும் பெரும் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநராக, மார்கெட்டில் வேலை செய்பவராக இருப்பதைக் காணமுடிகிறது. மற்றொரு புறம் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையங்களில் பட்டதாரிகள் குவிந்து கடைநிலை அரசு வேலையாவது பெற்றுவிட வேண்டும் எனத் தீவிரமாக முயன்று வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் 'முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்னென்ன?' என்ற நம் வாசகரின் கேள்விக்கு வழிகாட்டுகிறார் 'ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி'யின் நிறுவனர் டாக்டர் ஆர்.ராஜராஜன்.

டாக்டர். ஆர் .ராஜராஜன்  கல்வியாளர்
டாக்டர். ஆர் .ராஜராஜன் கல்வியாளர்

"முதுநிலை அறிவியல் படித்தவர்கள் இரண்டு வழியாகப் பயணிக்கலாம். முதலாவது அவர்களின் துறையில் சிறந்து விளங்க பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆகும் நேரச் செலவு பணச் செலவு போன்றவற்றை கையாலும் திறன் இருந்தால், துறை சார்ந்த அதீத ஆர்வம் இருந்தால் மட்டுமே இவ்வழியில் பயணிக்க முடியும். அடுத்தபடியாக, யூ.ஜி.சி நடத்தும் நெட் (NET - National Eligibility Test) தேர்வில் பங்கேற்று கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பினை பெறலாம். இரண்டாவது வழி, முதுநிலை அறிவியல் குறிப்பாக இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் படித்தவர்களின் அணுகுமுறை, சிந்திக்கும் முறை வலுவாக இருக்கும். எனவே அவர்கள் குடிமையியல் பணிக்கான யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வு போன்ற உயர்பதவிக்கான தேர்வுகளை எழுதலாம்.

Test | தேர்வு
Test | தேர்வு

குடிமையில் பணிகளில் 26 வகை பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு, இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் குடிமையியல் சேவை அணுகுமுறை மற்றும் பொது விழிப்புணர்வு தேர்வுகள் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் பிரதானத் தேர்வில் பங்கு பெறலாம். முதுநிலையில் குறிப்பாக அறிவியல் படித்தவர்கள் மீண்டும் இயற்பியல் அல்லது கணிதத்தை ஆழமாகப் படிக்க வேண்டும் எனும் போது தயக்கம் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அவ்வாறு தயங்குபவர்கள் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் போன்ற பிற துறைகளைத் தேர்வு செய்து படிக்கலாம். அடுத்து யு.பி.எஸ்.சி-யின் குரூப் 1 தேர்வு, டி.என்.பி.சி தேர்வுகளில் முயலலாம். மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் ஜிமேட் (GMAT - Graduate Management Admission Test) தேர்வு எழுதலாம்.

Exam | தேர்வு
Exam | தேர்வு

இந்தத் தேர்வு எழுதுவதன் மூலம் இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் தேர்வு பெற்று, படித்து முடித்து வெளியாகும் போதே நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. பொறியியல் படித்தவர்கள் மட்டும் என்று இல்லாமல் அறிவியல் படித்தவர்களும் ஜிமேட் எழுதலாம். வங்கித் துறையில் வேலை பெற IBPS தேர்வு எழுதலாம். பாதுகாப்புத் துறையில் விருப்பம் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தால் கம்பைன் டிஃபென்ஸ் சர்வீஸ் எக்ஸாம் (Combine Defense Service Exam) எழுதி ராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற முடியும். ராணுவ தேர்வில் எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.டி (SSD) என்னும் கடினமான நேர்முகத் தேர்வு ஐந்து நாட்கள் நடைபெறும். பெரிய உடலமைப்பு இல்லாவிட்டாலும் ஆரோக்கியமானவராக இருந்தாலே தேர்வாகலாம். இப்படி ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து அதில் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்" எனக் கூறி முடித்தார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man