Published:Updated:

பச்சை வண்ண மைக்கு அப்படி என்ன சிறப்பம்சம்? | Doubt of Common Man

Doubt of Common man
News
Doubt of Common man

பச்சை என்பது இனிமையான அதிகாரத்தின் அடையாளம். பள்ளியின் முயற்சிகளும் அதன் நோக்கமும் சரியான திசையில் இருப்பதை இது அங்கீகரிக்கிறது.

Published:Updated:

பச்சை வண்ண மைக்கு அப்படி என்ன சிறப்பம்சம்? | Doubt of Common Man

பச்சை என்பது இனிமையான அதிகாரத்தின் அடையாளம். பள்ளியின் முயற்சிகளும் அதன் நோக்கமும் சரியான திசையில் இருப்பதை இது அங்கீகரிக்கிறது.

Doubt of Common man
News
Doubt of Common man
விகடனின் `Doubt of common man' பக்கத்தில் வாசகர் ஒருவர், “பல வண்ணங்களில் பேனாக்கள் இருந்தாலும் நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மட்டுமே எல்லாருக்கும் தெரிந்த அடிப்படை நிறங்களாக இருக்கின்றன. அதன் உண்மையான காரணம் என்ன? மேலும் நீல நிற மையை மாணவர்கள், சிவப்பு நிற மையை ஆசிரியர்கள், பச்சை நிற மையை தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Doubt of common man
Doubt of common man

இதுகுறித்து தாசில்தார் மாரிமுத்துவிடம் கேட்டோம். “பக்கம் பக்கமாக எழுதும் போது நீல நிறத்தில் எழுதினால் படிப்பதற்கும் நன்றாக இருக்கும், கண்களுக்கும் அது உறுத்தாது. ஒரு தாளில் பாதி பக்கம் நீல நிறத்திலும் பாதி பக்கம் சிவப்பு நிறத்திலும் எழுதி பார்த்தால் இந்த வித்தியாசம் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.

அடுத்து சிவப்பு, எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் சிவப்பு நிறம் தனியாக தெரியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை காணக்கூடிய ஒளியை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே ஆசிரியர்களுக்கு திருத்துவதற்கும் மதிப்பெண்களை எண்ணுவதற்கும் மிக எளிதாகிறது. ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பிழைகளைக் கண்டறிவதற்கும், மொத்த மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்வதற்கும் மாணவருக்கும் எளிதாக இருக்கிறது. இதனாலேயே திருத்தம் செய்ய சிவப்பு மை பயன்படுத்தப்படுகிறது. 

பல வகை மைக்கள்
பல வகை மைக்கள்

மூன்றாவதாக பச்சை நிறம். பச்சை என்பது இனிமையான அதிகாரத்தின் அடையாளம். பள்ளியின் முயற்சிகளும் அதன் நோக்கமும் சரியான திசையில் இருப்பதை இது அங்கீகரிக்கிறது. போக்குவரத்து சிக்னலில் கூட பச்சை நிறமே முன்னோக்கி செல்லும். அதனால்தான், மக்களின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கும் அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் பச்சை நிற மையை உபயோகிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி பச்சை நிற மை என்பது சான்றிதழ்கள் வழங்கும் உரிமையுடைய ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பச்சை நிற மையால் கையெழுத்திட்ட ஒரு சான்றிதழை சாதாரண மாணவன் வாங்கும் போது அவனிடம் தானும் வளர்ந்து பச்சை நிற மையில் கையெழுத்திட வேண்டும் என்ற எண்ணம் வளரும், அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் ஒரு அடையாளமாக பச்சை மை பயன்படுத்தப்படுகிறது.”

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!