Published:Updated:

+2 படிக்காமல் நேரடியாக டிப்ளமோ முடித்திருக்கிறேன், என்னால் LLB சேர முடியுமா? | Doubt of Common Man

சட்டப்படிப்பு
News
சட்டப்படிப்பு

சட்டம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கு இருக்கிறது, கூடவே சட்டப்படிப்பு தொடர்பான சந்தேகங்களும் நிறையவே இருக்கிறது.

Published:Updated:

+2 படிக்காமல் நேரடியாக டிப்ளமோ முடித்திருக்கிறேன், என்னால் LLB சேர முடியுமா? | Doubt of Common Man

சட்டம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கு இருக்கிறது, கூடவே சட்டப்படிப்பு தொடர்பான சந்தேகங்களும் நிறையவே இருக்கிறது.

சட்டப்படிப்பு
News
சட்டப்படிப்பு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் சட்டப்படிப்பு தொடர்பான நிறைய கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்தனர். அப்படியான கேள்விகளுக்கான பதில்கள் இங்கே!
doubt of common man
doubt of common man

இந்தியாவில் சட்டம் படிக்க விரும்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பலருக்குப் பள்ளிக் கல்விக்குப் பிறகு இளநிலை மற்றும் முதுநிலை கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சட்டப் படிப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கு இருக்கிறது, கூடவே சட்டப்படிப்பு தொடர்பான சந்தேகங்களும் நிறையவே இருக்கின்றன. சட்டம் படிப்பது தொடர்பாகப் பலருக்கும் பல நிலைகளிலும் சந்தேகம் இருந்திருக்கிறது. சட்டப் படிப்பு தொடர்பான நிறையச் சந்தேகங்களை நமது வாசகர்கள் 'டவுட் ஆப் காமன் மேன்' பகுதியில் கேள்வியாக எழுப்பியிருந்தனர். அனைத்து கேள்விகளுக்கும் இங்கே ஒரே கட்டுரையில் விடையளிக்கப்பட்டிருக்கிறது.

LLB
LLB

சட்டப் படிப்பு தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் அவர்களை அணுகினோம். கேள்வி மற்றும் பதில்கள் பின்வருமாறு,

12-ஆம் வகுப்பு படிக்காமல் நேரடியாக டிப்ளமோ முடித்திருக்கிறேன், என்னால் LLB சேர முடியுமா? - ராஜீவ் காந்தி

மூன்று வருட டிப்ளமோ கோர்ஸ் என்பது 12-ஆம் வகுப்புக்குச் சமமான ஒரு படிப்பு. டிப்ளமோ முடித்தவர்கள் கண்டிப்பாகச் சட்டம் படிக்கலாம். ஆனால் அவர்கள் மூன்று வருட LLB படிப்பைப் படிக்க முடியாது. அவர்கள் ஐந்து வருட சட்டப்படிப்பைப் படிக்கலாம், அதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

சட்டப்படிப்பு
சட்டப்படிப்பு
நான் 10 வகுப்பை நேரடிக் கல்வி மூலம் பயின்றேன், 12-ஆம் வகுப்பு படிக்காமல் நேரடியாகத் திறந்தநிலைக் கல்வி மூலம் 3 ஆண்டு படித்துள்ளேன். நான் LLB-யில் சேர முடியுமா? - பிரதீப் குமார்

சட்டம் படிக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக 10+2+3 என்ற முறையில் படித்து, LLB படிப்பதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண் சதவிகிதத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே LLB படிக்க இயலும். திறந்தநிலை கல்வி மூலம் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும், பத்தாம் வகுப்பு முடித்து, 12-ஆம் வகுப்பு முடித்து, அதனைத் தொடர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றிருந்தால் மட்டுமே LLB படிக்க முடியும். டிப்ளமோ போலத் திறந்தநிலைக் கல்வி மூலம் மூன்று ஆண்டுகள் படிப்பது 12-ஆம் வகுப்புக்கு இணையாகாது. எனவே, பத்தாம் வகுப்பு முடித்து, 12-ஆம் வகுப்பு பயிலாமல் நேரடியாகத் திறந்தநிலைக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் LLB படிப்பைப் படிக்க இயலாது.

LLB மூன்று வருட கோர்ஸ் மற்றும், LLB ஹானர்ஸ் மூன்று வருட கோர்ஸ் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? எது படிப்பது சிறந்தது? - கங்காதரன்

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆப் எஸ்செலன்சில் படிப்பது எனக் கல்லூரிகள் மட்டும்தான் நார்மல் LLB படிப்புக்கும், LLB ஹானர்ஸ் படிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம். எப்படிப் பொறியியல் படிப்பதற்கு ஐஐடியில் படிப்பதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதோ, அதே போன்ற வித்தியாசம்தான். மற்றபடிப் பாடத்திட்டங்கள் எல்லாம் ஒரே பாடத்திட்டம்தான். LLB ஹானர்ஸ் படிப்பு முடித்தவர்கள் எந்த பணியெல்லாம் செய்ய முடியுமோ, அதைச் சட்டக்கல்லூரியில் LLB படித்தவர்களும் செய்ய முடியும். இது இரண்டும் படிக்கச் சேர்க்கை நடைமுறை கூட ஒன்று போலத்தான் உள்ளது. இப்போது ஹானர்ஸ் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளதால், போட்டி அதிகமாகி உள்ளது. ஆனால், மதிப்பெண் வரையறையில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

LLB
LLB

சாதாரணமாக 45%, 40% பெற்றிருந்தால் சட்டக்கல்லூரியில் LLB படிக்கலாம், ஆனால் ஹானர்ஸ் படிக்க 90% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மற்றபடி எந்த வித்தியாசமும் பெரிதாக இல்லை. இரண்டுமே சிறந்ததுதான். இதுமட்டும் இல்லாமல் CLAT தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் படிக்க முடியும். அதற்கு வருடா, வருடம் நாடு முழுவதும் நடக்கும் CLAT தேர்வை எழுதித் தேர்வாக வேண்டும்.

நான் அரசுப் பணியில் உள்ளேன், என்னால் தொலைதூரக் கல்வி மூலம் LLB படிக்க இயலுமா? - மருதப்பன்

சட்டப்படிப்பைக் கண்டிப்பாக ரெகுலரில் மட்டுமே படிக்க முடியும். தொலைதூரக் கல்வி முறையில் சட்டப்படிப்பைப் படிக்க முடியாது. 15 முதல் 20 வருடத்திற்கு முன்பு வரை மாலை நேர வகுப்புகள் மூலம் சட்டம் படிக்கும் வாய்ப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது மாலை நேர வகுப்புகளும் இல்லை. சட்டம் படிப்பவர்கள் கண்டிப்பாகக் கல்லூரி சென்று படிக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்பைப் படிக்க முடியாது.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man