Published:Updated:

தொலைதூர கல்வி மூலமாகப் பயின்றவர்கள் LLB படிப்பில் சேர முடியுமா? | Doubt of Common Man

LLB
News
LLB

ஒருவர் மூன்று வருட LLB கோர்ஸ் படிப்பதற்கு 10+2+3 என்ற முறையில் பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்திருந்தால் போதுமானது.

Published:Updated:

தொலைதூர கல்வி மூலமாகப் பயின்றவர்கள் LLB படிப்பில் சேர முடியுமா? | Doubt of Common Man

ஒருவர் மூன்று வருட LLB கோர்ஸ் படிப்பதற்கு 10+2+3 என்ற முறையில் பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்திருந்தால் போதுமானது.

LLB
News
LLB
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் கோமதி சங்கர் என்ற வாசகர், "நான் 10-ம் வகுப்பு வரை பள்ளியிலும், 12-ம் வகுப்பு டுடோரியலும், B.A history தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்றேன். இதன் அடிப்படையில் 3 வருட LLB படிப்பைக் கல்லூரி சென்று பயில முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

கல்வி என்னும் ஆயுதம் சிலருக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. சிலருக்கோ கிடைப்பதேயில்லை. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற அடிப்படையில் பலர் பள்ளிக் கல்வியை முடித்திருப்பார்கள். அதற்குப் பிறகு மேற்படிப்பு படிப்பதற்கான வழிகாட்டுதல்கள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பதில்லை. என்ன படிக்க வேண்டும் என்ற ஆசையும் தெளிவும் இருந்தாலும், அதற்கான வழிமுறை என்ன, விதிமுறை என்ன, யாரிடம் சென்று கேட்பது என வழிகாட்டல் இல்லாமல் தவிப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். நம் வாசகர் ஒருவருக்கும் கல்லூரி மேற்படிப்பு தொடர்பான சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது 'டவுட் ஆஃப் காமன் மேன்' பக்கத்தில் கேட்டிருந்தார்.

சட்டப் பல்கலைக்கழகம்
சட்டப் பல்கலைக்கழகம்

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம், "பார் கவுன்சில் விதிப்படி ஒருவர் மூன்று வருட LLB கோர்ஸ் படிப்பதற்கு 10+2+3 என்ற முறையில் பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்திருந்தால் போதுமானது. அதற்கு முழு நேரமாகப் பள்ளியில் மட்டும்தான் படித்திருக்க வேண்டும் அல்லது முழுநேரமாகக் கல்லூரி சென்றுதான் படித்திருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், அரசு கூறியுள்ளபடி சரியான முறையில், அந்தந்த நேரத்தில் எழுதவேண்டிய தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடவே LLB படிப்பதற்கான சில மதிப்பெண் வரையறைகள் உள்ளன. அதனையும் பெற்றிருக்க வேண்டும். பள்ளி/கல்லூரியில் பொதுப்பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும், எஸ்சி எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 40 சதவிகித்a மதிப்பெண்களும் பெற்றிருந்தால் தாராளமாக அவர்கள் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்

பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பில் ஒன்றிரண்டு பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தை எழுதி தேர்ச்சி பெற்றாலும் அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் பிரைவேட் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போலத்தான் டுட்டோரியலில் படித்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் பிரைவேட் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே டுட்டோரியலில் படித்திருந்தாலும், தொலைதூர கல்வி மூலமாகக் கல்லூரி படிப்பை முடித்திருந்தாலும் அது எந்த விதத்திலும் சட்டம் படிப்பதற்குத் தடையாகாது. பத்தாவது வரை பள்ளியில் படித்திருந்தாலும், 12-ம் வகுப்பைத் தனித் தேர்வராக எழுதியிருந்தாலும் சட்டம் படிப்பதற்குத் தேவையான மதிப்பெண்ணுடன் 10+2 என்று இருந்தாலே அவர்கள் 5 வருட சட்டப்படிப்பைப் படிக்கலாம்."

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man
doubt of common man