Published:Updated:

How To: AFCAT தேர்வு முடிவை இணையத்தில் பார்ப்பது எப்படி? | How To Check AFCAT Result Online?

இணையம்

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், AFCAT-ன் அதிகாரபூர்வ இணையதளமான afcat.cdac.in தளத்திற்குச் செல்லவும்.

Published:Updated:

How To: AFCAT தேர்வு முடிவை இணையத்தில் பார்ப்பது எப்படி? | How To Check AFCAT Result Online?

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், AFCAT-ன் அதிகாரபூர்வ இணையதளமான afcat.cdac.in தளத்திற்குச் செல்லவும்.

இணையம்

இந்திய விமானப்படை (IAF) மூலம் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT - Air Force Common Admission Test) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான fcat.cdac.in -ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

indian air force
indian air force

முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தடுத்து AFSB சோதனை, மருத்துவப் பரிசோதனை என மேற்கொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகளை இணையதளத்தில் அறிந்துகொள்ளும் வழிமுறைகளை பார்க்கலாம்...

முதலில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், AFCAT-ன் அதிகாரபூர்வ இணையதளமான afcat.cdac.in தளத்துக்குச் செல்லவும். அதில், அறிவிப்புப் பட்டியில் (notification பகுதியில்) AFCAT-1/2023 முடிவு (AFCAT-1/2023 Result) என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.

அடுத்து, புதிதாக ஒரு பக்கம் திறக்கும். திறக்கும் பக்கத்தில் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விவரங்கள் கேட்கப்படும். அவற்றை நிரப்பவும். பின் AFCAT- 2 முடிவு திரையில் காட்டப்படும்.

Online (Representational Image)
Online (Representational Image)
Photo by Anna Shvets from Pexels

பின்பு, ’டவுன்லோடு’ என்ற பகுதியை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து, அதனை ப்ரின்ட் எடுத்துக்கொள்ளவும்.

AFCAT தேர்வானது, இந்திய விமானப்படையால் (IAF) வருடத்திற்கு இருமுறை நடத்தப்படுகிறது. இது தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் வானில் மற்றும் தரைப் பகுதியில் Grade-1 கெஸட்டெட் அதிகாரிகளை நியமிப்பதற்காக நடத்தப்படுகிறது.