பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!
பிரீமியம் ஸ்டோரி
News
அச்சம் தவிர்!

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களின் விழிகளில் உற்சாகச் சுடர்..!

விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடத்திய, ‘UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி?’ இலவசப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, காலை முதலே மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

எத்திராஜ் கல்லூரி மாணவர்கள்
எத்திராஜ் கல்லூரி மாணவர்கள்

முதலில் உரையாற்றிய தமிழக அரசின் மேனாள் முதன்மைச் செயலாளர் ஜவஹர் ஐ.ஏ.எஸ், “உங்களுடைய முயற்சிகளுக்கான முதல் எதிரி நீங்கள்தான். உங்களால் எதுவும் முடியும் என்பதை நீங்களே நம்ப மறுக்கிறீர்கள். தொடர்ந்து நம்ப வேண்டும், கீழே விழுந்தாலும் சோர்ந்துவிடாமல் மறுபடியும் எழுந்து ஓட வேண்டும், அதுதான் தன்னம்பிக்கை. எந்த விஷயத்தைச் செய்தாலும் கவனமாகச் செய்யுங்கள். கவனம் மிக முக்கியம். படிப்பைப் பற்றிய பிரபலமான வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தொட்டுப் பார்த்தால் காகிதம், தொடர்ந்து படித்தால் ஆயுதம்” என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் டாக்டர் சங்கர சரவணன், இதுபோன்ற தேர்வுகளில் தாய்மொழியின் அவசியம் குறித்துப் பேசினார். “தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தேர்வில் வேறு மொழியைத் தேர்வு செய்ததால் தோல்வியடைந்த கதைகள் நிறைய உண்டு’’ என்றார்.

அச்சம் தவிர்!
அச்சம் தவிர்!

இறுதியாக, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கௌரவ ஆலோசகர் சத்யஸ்ரீ பூமிநாதன், “2019-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து தேர்வானவர்களின் எண்ணிக்கை 40க்கும் குறைவு. 35,000 பேர் மட்டுமே UPSC தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் திறமையான மாணவர்கள் இருந்தும் அவர்களுக்குள் இருக்கும் பயம் மட்டுமே அவர்களைத் தடுக்கிறது. க்ரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருக்கும் நிலையில் UPSC தேர்வுக்கு இவ்வளவு குறைவான விண்ணப்பங்கள் வந்ததற்கும், தாம் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்ற மாணவர்களின் பயமே காரணம். உங்கள் பயத்தைத் தூக்கியெறிந்து வெளியே வாருங்கள்’’ என மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பேசினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களின் விழிகளில் உற்சாகச் சுடர்!