லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ரீஓப்பனிங்: கெட்... செட்... கோ... செக்லிஸ்ட்!

ரீஓப்பனிங்: கெட்... செட்... கோ... செக்லிஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரீஓப்பனிங்: கெட்... செட்... கோ... செக்லிஸ்ட்!

ஹாஸ்டலுக்கு செல்கிறோம் என்று நொறுக்குத் தீனிகளை மூட்டைகட்டி எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகபட்சம் 10 நாள்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ் மட்டும் கொண்டுசெல்லுங்கள்.

மே மாதம் நிறைவடையப் போகிறது. பள்ளி அல்லது கல்லூரி செல்லத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். ரீ-ஓப்பனிங் நாள் நெருங்க, நெருங்க, தினமும் பள்ளி, கல்லூரி போய் வருபவர்களைவிடவும், ஹாஸ்டல் மாணவர்களுக்கு கூடுதல் பதற்றம் தொற்றிக்கொள்ளும். எந்தப் பதற்றமும் இன்றி, ஹாஸ்டலுக்கு கிளம்ப, எடுத்துச்செல்ல வேண் டிய பொருள்களை லிஸ்ட் போட்டு, முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துவிட்டாலே நிம்மதியாக உணர்வீர்கள். அதற்கான செக்லிஸ்ட் இதோ...

உடைகள்: யூனிபார்ம் செட் - இரண்டு, மாற்று உடைகள், தேவைக்கு அதிகமாகவே உள்ளாடைகள்.... ஷூ மற்றும் சாக்ஸ், காலணிகள் தலா இரண்டு செட்.

டாய்லெட்டரீஸ்: பக்கெட், மக், டூத்பிரஷ், டூத்பேஸ்ட், சோப், ஃபேஸ்வாஷ், டவல், ஷாம்பூ, சானிட்டைசர், மாஸ்க், சானிட் டரி நாப்கின்கள் போன்றவை.

முதலுதவி பெட்டி: பேண்டேஜ், தைலம், தெர்மாமீட்டர், பஞ்சு...நீங்கள் ஏதாவது மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்பவராக இருந்தால் அவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கூடுதல் நாள்களுக்கான மாத்திரைகளையும் எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக மருந்துச் சீட்டை மறக்க வேண்டாம்.

ரீஓப்பனிங்: கெட்... செட்... கோ... செக்லிஸ்ட்!
ரீஓப்பனிங்: கெட்... செட்... கோ... செக்லிஸ்ட்!

பணம்: என்னதான் எல்லாவற்றுக்கும் ஆன் லைனில் செலவழித்தாலும், கையிருப்பாக கொஞ்சம் பணம் எடுத்துச் செல்வது நல்லது.

ஸ்நாக்ஸ்: ஹாஸ்டலுக்கு செல்கிறோம் என்று நொறுக்குத் தீனிகளை மூட்டைகட்டி எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகபட்சம் 10 நாள் களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ் மட்டும் கொண்டுசெல்லுங்கள். அவையும் வீட்டில் தயாரித்தவையாக இருந்தால் சிறப்பு. சத்து மாவு, நட்ஸ் போன்றவற்றையும் எடுத்துச் செல்லலாம்.

படுக்கை: பெட்ஷீட், போர்வை, தலையணை, தலையணை உறைகள்... இவை அனைத்தையும் இரண்டு செட் கொண்டு செல்லுங்கள். குறிப் பிட்ட இடைவெளியில் துவைத்துக் காயவைத்து மாற்றி மாற்றிப் பயன்படுத்துங்கள். ஸ்வெட்டர், மழை கோட், குடை ஆகியவையும் அவசியம்.

ஸ்டேஷனரி பொருள்கள்: பேனாக்கள், பென்சில்கள், இங்க் பாட்டில், ரப்பர், ஷார்ப்பனர், க்ளூ, ஸ்டேப்ளர், கத்தரிக்கோல், செலோ டேப், கலர் பென்சில், எக்ஸ்ட்ரா நோட் புக்குகள், டிக்‌ஷனரி, A4 பேப்பர்கள், மார்க்கர்...இத்யாதி, இத்யாதி...

இதர பொருள்கள்: சிலருக்கு ஹாஸ்டல்களில் லாண்ட்ரி வசதி இருக்காது. அவர்கள் சலவை சோப், சலவை பவுடர், பிரஷ், துணிகளைக் காயவைக்க க்ளிப் மற்றும் கயிறு ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.

உங்களுடைய பெட்டிகளைப் பூட்டிவைக்க பூட்டுகள், வாட்டர் பாட்டில், ஃபிளாஸ்க், சீப்பு, பவுடர், பொட்டு, பழைய செய்தித்தாள்கள், டிஷ்யூ பேப்பர், டார்ச் லைட், அயர்ன் பாக்ஸ், கொசு வலை, சின்ன லாக்கர் மற்றும் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்.