கல்லூரிப் படிப்பை அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்குள்ளேயே முடித்துவிட வேண்டும் என்பதுதான் நம் பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில கோர்ஸ்களை வழங்கும் சிறப்புமிக்க கல்லூரிகள் நம் மாநிலத்தைத் தாண்டி இந்தியா முழுக்க பரவிக் கிடப்பதே நிதர்சனம். இதன் காரணமாகத்தான் தற்போதிருக்கும் நம் எண்ணத்தை முழுவதுமாக மாற்றிட வேண்டும். இதுபோன்ற கல்லூரிகளில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்ணைத் தாண்டி அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளே பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் அது பற்றியான விழிப்புணர்வு நம் மக்களிடையே போதுமான அளவு இல்லை.

மேலும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் JEE குறித்து நம் கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களிடையே இன்னமும் பிரபலமாகவில்லை என்பதே எதார்த்தம்.
பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் பற்றி இந்த வார ஆனந்த விகடனின் ‘நாளை என்ன வேலை’ தொடரில் எழுதியுள்ளார் கல்வியாளர் ரமேஷ் ரமேஷ். இதுதவிர நேர்காணல்களை எதிர்கொள்வதற்கான எளிய வழிகள் குறித்து மனிதவள மேம்பாட்டு ஆலோசகரான சுஜித் உடனான காணொளி லிங்க் கீழே: