தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளில் தமிழ்நாடு அரசு பணிகளுக்கு என தகுதியற்ற படிப்புகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் படிப்புகளுக்கு இணையாக ஏற்கெனவே படிப்புகள் இருப்பதால் சில படிப்புகளை அரசு பணிக்குத் தகுதியில்லாத படிப்புகள் எனக்கூறி அறிவிப்பாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,
* `தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழத்தில் வழங்கப்படும் முதுநிலை இணைய பாதுகாப்பு படிப்பு, முதுநிலை கம்ப்யூட்டர் படிப்புக்கு இணையானது இல்லை.
* பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதுநிலை தகவல் தொழில்நுட்பம் படிப்பு (பகுதி நேரம்), முழுநேர முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்புக்கு இணையானது இல்லை.
* திருச்சியை சேர்ந்த தன்னாட்சிக் கல்லூரியில் வழங்கப்படும் M.Sc Applied Science படிப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் M.Sc Physics படிப்புக்கு இணையானது இல்லை.
* பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை தகவல் தொடர்பு படிப்பு, எம்சிஏ படிப்புக்கு இணையானது இல்லை.
* சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, இளநிலை தகவல் தொடர்பு படிப்புக்கு இணையானது இல்லை.
* இளநிலை கூட்டுறவு படிப்பு, பி.காம் படிப்பிற்கு இணையானது இல்லை' என்று தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும்,
* `அண்ணாமலை சட்டக்கல்லூரியில் வழங்கப்படும் Bachelor of Academic Law படிப்பை முடித்தவர், Chennai Port Authority-ல் உள்ள Legal Adviser postingக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே பல்கலைக்கழகத்தின் எம்.ஏ மொழியியல், எம்.ஏ ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாக ஏற்கப்படாது.
* அவினாசிலிங்கம் பல்கலையின் B.Sc Special Education and Rehabilitation and Physics என்ற படிப்பு, B.Sc physics படிப்புக்கு இணையானதாகக் கருதப்படாது.
* மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Sc Electronics and Communication படிப்பு M.Sc Physics படிப்புக்கு இணையாகக் கருத முடியாது.
* திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழங்கும் B.Sc Bio-Technology, B.Sc Botony படிப்புக்கு இணையானதாக கருதப்படாது.
* TamilNadu Teacher Education Universityல் வழங்கப்படும், B.sc (Botony) B.Ed (4 year integrated course), B.sc Botony படிப்புக்கு இணையானது இல்லை.
* சேலத்தை சேர்ந்த தன்னாட்சிக் கல்லூரி வழங்கும் B.A. Public Administration படிப்பு, பெரியார் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் B.A. Political Science படிப்புக்கு இணையானது இல்லை' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கோவா பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வழங்கப்படும் சில படிப்புகளுக்கு தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகம் செய்கின்றன. இந்த மாதிரியான படிப்புகளில் பட்டம் பெறும் மாணவர்களும் அரசுப்பணிகளில் சேர விண்ணப்பிக்கின்றனர். இப்படி பட்டம் பெறுபவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே படிப்புகளை, அதன் மூல படிப்புகளுடன் ஆராய்ந்து இது போன்ற தகுதி நீக்கங்களும், படிப்புகளை இணைப்பதும் நடக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.