பொறியியலில் எந்தத் துறையில் சேர்வது? நீங்கள் விருப்பப்படும் படிப்புக்கேற்ற நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? அரசு வேலை பெற எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம்?
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்விக்காக கல்லூரியில் சேரக் காத்திருக்கும் உங்களுக்கு இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கக்கூடும்.

கல்வி விகடன் சார்பில் ‘+12-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ? ’ என்ற உயர்கல்விக்கான இலவச வழிகாட்டி நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ( 20.5.2023) அன்று சென்னையில் உள்ள விகடன் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. கல்வியாளர்கள் தா.நெடுஞ்செழியன், ‘ஆனந்தம்’ செல்வகுமார், கி.சரவண பாஸ்கரன், நித்யா.கு ஆகியோர் இந்நிகழ்வில் உயர்கல்வி தொடர்பான உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவிற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை கல்வி விகடனோடு இணைந்து வழங்குகிறது பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி.