Published:Updated:

How to: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? I How to apply first graduate certificate online?

Online Application (Representational Image)
News
Online Application (Representational Image) ( Photo by Anna Shvets from Pexels )

ஒரு குடும்பத்தில் இருந்து முதன்முதலாக உயர்கல்வி படிக்க வரும் மாணவருக்கு, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும். அது, கல்விக் கட்டண சலுகை முதல் ஸ்காலர்ஷிப் வரை அரசின் பல நலத்திட்டங்களைப் பெற அவசியமானதாக இருக்கும். அதை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Published:Updated:

How to: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? I How to apply first graduate certificate online?

ஒரு குடும்பத்தில் இருந்து முதன்முதலாக உயர்கல்வி படிக்க வரும் மாணவருக்கு, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும். அது, கல்விக் கட்டண சலுகை முதல் ஸ்காலர்ஷிப் வரை அரசின் பல நலத்திட்டங்களைப் பெற அவசியமானதாக இருக்கும். அதை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Online Application (Representational Image)
News
Online Application (Representational Image) ( Photo by Anna Shvets from Pexels )

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வியில் ஆரம்பித்து மாணவர்கள் பல நலத்திட்டங்களைப் பெற முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் என்பது மிக அவசியமான விஷயமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டியில் ஆரம்பித்து, தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என யாரும் பட்டதாரியாக இல்லாமல், அக்குடும்பத்தில் இருந்து முதன்முதலாக கல்லூரிப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் அரசின் பல சலுகைகள் கிடைக்கும். அவற்றைப் பெறுவதற்கான முக்கிய ஆவணமான இந்த முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழைப் பெற, எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது என்பதைப் பார்க்கலாம்.

College student (Representational Image)
College student (Representational Image)

தேவையான ஆவணங்கள்

1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2. ஆதார் அட்டை.
3. ஸ்மார்ட் ரேஷன் அட்டை.
4. 10-வது மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ்.
5. பள்ளி மாற்றுச் சான்றிதழ்.
6. வீட்டில் வேறு யாரேனும் படித்திருந்தால் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழ்.

எப்படி அப்ளை செய்வது

ஸ்டெப் 1
- கணினியில் TNeGA என்ற வெப்சைட்டை திறந்து கொள்ளவும். அதில் citizen login அல்லது பயனாளர் உள்நுழைவு என்ற பகுதியை கிளிக் செய்து உள்ளே சென்றால், அங்கே தோன்றும் பக்கத்தில் login செய்யச் சொல்லிக் கேட்கும். அதற்கு முன்னதாக நீங்கள் உங்கள் விவரங்களைக் கொடுத்து ரெஜிஸ்டர் (register) செய்திருக்க வேண்டும்.

ஸ்டெப் 2
- ரெஜிஸ்டர் செய்வதற்கு New User என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே சென்று உங்களுடைய முழு பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து, கடவுச்சொல்லை செட் செய்துவிட்டு register செய்துகொள்ளவும். அதன் பின் உங்களுடைய user name மற்றும் password-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.

Graduation
Graduation
Image by McElspeth from Pixabay

ஸ்டெப் 3
- தொடர்ந்து, login செய்து உள்ளே சென்ற பின் தோன்றும் பக்கத்தில் Revenue department என்பதை க்ளிக் செய்து உள்ளே சென்றால், REV-104-First Graduate Certificate என்ற ஆப்ஷன் இருக்கும்... க்ளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 4
- அடுத்ததாக ஓப்பன் ஆகும் புதிய பக்கத்தில், அப்ளை செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கவனமாகப் படித்து, அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். படித்த பின் proceed கொடுத்து உள்ளே செல்லவும்.

ஸ்டெப் 5
- அடுத்ததாக உங்களுடைய CAN (The Common Account Number) நம்பரை register செய்ய வேண்டும். உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் register செய்யவும். ஒருவேளை உங்களுக்கு உங்களுடைய CAN நம்பர் தெரியவில்லை எனில், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்த விவரங்கள் கேட்கப்படும், அதைச் சரியாகக் கவனித்து கொடுத்துவிட்டு search என்ற பகுதியை க்ளிக் செய்தால் உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதை க்ளிக் செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். அதன் பின் உங்களுடைய எண்ணுக்கு ஒரு OTP வரும். அதைக் கொடுத்துவிட்டு, proceed என்ற option-ஐ க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 6
- அதன் பின் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய சுய விவரங்கள் அனைத்தும் கேட்கப்படும். நீங்கள் CAN பகுதியைப் பூர்த்தி செய்திருப்பதால் உங்களுடைய விவரங்கள் தானாக நிரப்பப்பட்டு இருக்கும். அதன் கீழே உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, உங்கள் அம்மா, அப்பா, அவர்களுடைய சுயவிவரம், தாத்தா, பாட்டி, அவர்களுடைய சுயவிவரம், வேலை தொடர்பான மற்ற அனைத்து விவரங்களையும் கவனமாகப் பார்த்து நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்டிருபப்பது சரியாக உள்ளதா என்று செக் செய்துகொள்ளவும். அதன் பின் submit கொடுக்கவும்.

College Students (Representational Image)
College Students (Representational Image)
Pixabay

ஸ்டெப் 7
- அடுத்தபடியாக, கேட்கப்பட்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்ய வேண்டும். ஒவ்வொரு டாக்குமென்ட்டையும் அடுத்தடுத்து upload செய்யவும். ஆவணங்களை அப்லோடு செய்வதற்குத் தேவையான அளவுகளில் அவற்றை சரியாக வைத்திருந்தால், இந்தப் பகுதியில் சுலபமாகப் பதிவேற்றம் செய்ய முடியும். அனைத்தையும் பதிவேற்றம் செய்தபின் make payment என்று இருப்பதை க்ளிக் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 8
- இப்போது, payment செய்வதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ரூபாய் 60 செலுத்தவும். பின் உங்களுக்கு ஒப்புகை சீட்டு ஒன்று வழங்கப்படும், அதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இவ்வாறு எல்லாம் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பின் உங்களுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நீங்கள் கொடுத்திருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். விண்ணப்பம் அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சரிபார்க்கப்பட்டு, 10 நாள்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்.

Graduate
Graduate

இந்த வழிமுறைகளில், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து உங்களுடைய முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அல்லது, தேவைப்படும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள இசேவை மையங்களுக்குச் சென்றால், அவர்கள் அப்ளை செய்து கொடுப்பார்கள். அதன் பின் 10 நாள்கள் கழித்து, அவர்கள் கொடுத்திருக்கும் acknowledgement ஸ்லிப்பை எடுத்துச் சென்றால், உங்களது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.