Published:Updated:

How to: நீட் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?|How to know NEET result?

NEET 2022
News
NEET 2022

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு (செப்டம்பர் 7) வெளியாகியுள்ளன. இந்த நீட் தேர்வின் முடிவுகளை பார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே...

Published:Updated:

How to: நீட் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?|How to know NEET result?

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு (செப்டம்பர் 7) வெளியாகியுள்ளன. இந்த நீட் தேர்வின் முடிவுகளை பார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே...

NEET 2022
News
NEET 2022

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்விற்கு 18 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 95%க்கும் மேலானோர் தேர்வு எழுதிருந்தனர். இந்த தேர்விற்கான முடிவுகள் நேற்றிரவு (செப்டம்பர் 7) வெளியாகியுள்ளன. நீட் தேர்வின் முடிவுகளைப் பார்ப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

neet exam
neet exam

* நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு, neet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

* திறக்கும் இணையதள பக்கத்தில், NEET UG 2022 RESULT என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.

* இங்கு உங்களுடைய அப்ளிக்கேஷன் நம்பர் மற்றும் உங்களுடைய பிறந்தநாள் போன்றவற்றை உள்ளிடவும். கூடவே அங்கு காட்டப்படும் செக்யூரிட்டி code போன்றவற்றையும் உள்ளிடவும்.

* தற்போது உங்கள் ரிசல்ட் திரையில் தெரியும். ஒருவேளை காண்பிக்கப்படவில்லை எனில், மறைநிலை அல்லது தனிப்பட்ட உலாவல் பயன்முறையைப் பயன்படுத்தவும்

நீட் தேர்வானது இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS), இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS), ஆயுர்வேதம் இளங்கலை, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BSMS) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தகுதி நுழைவுத் தேர்வாகும்.

NEET
NEET

இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS), மற்றும் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) மற்றும் BSc (H) நர்சிங் படிப்புகள் போன்றவற்றிற்கு ஜூலை மாதம் 17-ம் தேதி இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் (கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத் சிட்டி, தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ்) உட்பட 497 நகரங்களில் 3,570 மையங்களில் NEET-UG தேர்வு நடத்தப்பட்டது.