Published:Updated:

விபத்தில் காயம், ஆம்புலன்ஸில் படுத்தபடி 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவி!

ஆம்புலன்ஸில் தேர்வு எழுதும் மாணவி
News
ஆம்புலன்ஸில் தேர்வு எழுதும் மாணவி

தேர்வு காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன் மாணவிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அவர் ஆம்புலன்ஸில் படுத்தபடி விடைகளை தெரிவித்தார். விடைகளை எழுத ஓர் உதவியாளர் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் விடாமுயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் தற்போது எஸ்.எஸ்.சி.எனப்படும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மும்பை பாந்த்ராவில் உள்ள செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத விபத்தில் சிக்கினார். அவர் மீது கார் மோதியதில் ஒரு கால் உடைந்துவிட்டது.

உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முஷிராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு வாரம் படுத்த படுக்கையாக முழு ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என்பதில் மாணவி தீவிரமாக இருந்தார். இதற்காக ஆம்புலன்ஸில் முபஷிரா தேர்வு நடைபெறும் பள்ளிக்கு வந்தார்.

விபத்தில் காயம், ஆம்புலன்ஸில் படுத்தபடி 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவி!

அவர் ஆம்புலன்ஸில் படுத்தபடி இருந்தார். தேர்வு காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன் மாணவிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. மாணவி படுத்தபடி விடைகளை தெரிவித்தார். விடைகளை எழுத ஓர் உதவியாளர் அனுமதிக்கப்பட்டார். அவர் சொல்லும் விடைகளை உதவியாளர் எழுதினார். ஆம்புலன்ஸ் அருகில் ஒரு போலீஸ்காரரும், பியூன் ஒருவரும் நின்றனர். பள்ளி முதல்வர் சகோதரி ஆரோக்கியம்மாள் ஆண்டனி, மாணவி தேர்வு எழுதத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்.

இது குறித்து மாணவி முபஷிரா கூறுகையில், ``தேர்வு எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு மணி நேரமும் கேள்வித்தாளை கையில் பிடித்தபடி படுத்துக்கொண்டு விடைகளைச் சொன்னது மிகவும் கஷ்டமாக இருந்தது’’ என்று தெரிவித்தார். அடுட்த இரு தேர்வுகளையும் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி எழுதத் திட்டமிட்டுள்ளார். மாணவியின் விடாமுயற்சியை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.