Published:Updated:

ஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா? #DoubtOfCommonMan

Doubt Of CommonMan
News
Doubt Of CommonMan ( pixabay.com )

“கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றிருந்தால், அந்தத் துறைக்கு மட்டுமே ஆசிரியராகப் பணியாற்ற முடியும். பி.ஏ ஆங்கில இளங்கலைப் படிப்பிற்கு இந்த பி.எட் பட்டம் பொருந்தாது. எனவே, ஆங்கில இளங்கலைக்கு என்று தனியாக பி.எட் பட்டம் பெறவேண்டியது அவசியம்.

தமிழகத்தில், பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படித்த துறையிலேயே வேலைவாய்ப்பு என்பது பலருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. அதனால் பலர், கிடைத்த வேலையில் இருந்துகொண்டே தங்களுக்கு விருப்பமான துறைக்காகத் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

Doubt Of CommonMan
Doubt Of CommonMan
pixabay.com

ஒருவர், தான் படித்த துறையிலேயே பட்டம்பெற்று, அதேதுறையில் மேற்படிப்பை முடித்து வேலைவாய்ப்பை அமைத்துக்கொண்டால் பிரச்னையில்லை. ஆனால், அந்தத் துறையால் அவருக்கு வாய்ப்புகள் அமையாதபோது அவர் கூடுதலாகப் படிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான், அவர் எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும்!

“நான் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளேன். தவிர, பி.ஏ ஆங்கில இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். நான் கணினி அறிவியல் பாடத்தில் பெற்ற பி.எட் பட்டம் ஆங்கில இலக்கியத்துக்கும் பொருந்துமா அல்லது அதற்குத் தனியாக பி.எட் பட்டம் பெற வேண்டுமா?” என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், வாசகி பாத்திமா. இந்தக் கேள்வியை கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியின் முன் வைத்தோம்.

Doubt Of CommonMan
Doubt Of CommonMan
pixabay.com

“கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றிருந்தால், அந்தத் துறைக்கு மட்டுமே ஆசிரியராகப் பணியாற்ற முடியும். பி.ஏ ஆங்கில இளங்கலைப் படிப்பிற்கு இந்த பி.எட் பட்டம் பொருந்தாது. எனவே, ஆங்கில இளங்கலைக்கு என்று தனியாக பி.எட் பட்டம் பெறவேண்டியது அவசியம்.

ஆனால் சில தனியார் பள்ளிகளில், இவர்களைக் கணினி அறிவியலுக்கு ஆசிரியராக நியமித்து, சில நேரங்களில் ஆங்கில வகுப்பும் எடுக்கச்சொல்லி வற்புறுத்துவார்கள். ஆங்கிலத் துறைக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது அப்படிச் செய்வார்கள். அது, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளைப் பொறுத்தது.

Doubt Of CommonMan
Doubt Of CommonMan
pixabay.com

அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இது பொருந்தாது. கணினி அறிவியல் பிரிவில் பி.எட் பட்டம் பெற்றிருந்தால், அதற்கு மட்டுமே தகுதியுடைய ஆசிரியராக அவர் இருப்பார். ஆங்கிலத் துறையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால், அவர் அதற்காக பி.ஏ ஆங்கிலத்துக்கு பி.எட் படிக்க வேண்டும். நிறைய ஆசிரியர்களின் பெயர்களுக்குப் பின்னால் இரு பி.எட், இரு எம்.எட் தகுதி இருப்பதைப் பார்த்தால் இது புரியும்” என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

Doubt Of CommonMan
Doubt Of CommonMan

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.