வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மனித உயிர்கள் யாவுமே உடல் உயிர் மனம் என்ற மூன்றின் பாகங்களைக் கொண்டவை . இவற்றில் உயிர், மனம் ,உடல் இவற்றைப் பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் .
இந்த உயிர், உடல், மனம், மூன்றும் சேர்ந்து உருவாக்குவதுதான் அறிவு. அறிவு என்பது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை . அறிவில்லாதவன் பிணத்திற்கு சமம் என்று நமது பண்பாடுகள் சொல்கின்றன .அறிவைப் பற்றி நாம் சில கருத்துக்களைத் தெரிந்து கொள்வோம்.
மனம் உயிர் உடல் மூன்றும் சேர்ந்துதான் அறிவை உருவாக்க முடியும். அறிவு என்பதை மனோதத்துவ இயலாளர்கள் (Physchologists) நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள் . அவற்றை கல்வி அறிவு, பண்பாட்டு அறிவு, ஒழுக்க இயல் அறிவு, வாழ்க்கை அறிவு என்று நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.

கல்வியறிவை இன்டலிஜன்ட் க்வோசன்ட் ( Intelligent quotient ) என்கிறார்கள். பண்பறிவை எமோஷனல் க்வோசன்ட் ( Emotional quotient) என்கிறார்கள் . ஒழுக்க இயலை அவர்கள் சோசியல் க்வோசன்ட்( Social quotient) என்கிறார்கள் . வாழ்வியல் அறிவை அட்வர்சிடி க்வோசன்ட் (Adversity quotient) என்கிறார்கள். இவை குறித்து நாம் பார்க்கலாம்.
கல்வி அறிவு என்பது நாம் பொருள்கள் பற்றியதும், விஞ்ஞானம், மருத்துவம் ,கணிதம் ,பௌதீகம், ரசாயனம் ,வானியல் போன்றவற்றை கற்றல் மூலம் தெரிந்து, பெறுகிறோம். இவற்றை ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி , மேல்நிலை கல்வி , கல்லூரிக் கல்வி என்று வகைப்படுத்துகிறார்கள். எத்தகைய கல்வியாக இருந்தாலும் ,மனனம் செய்வது, பாடங்களை அறிந்து கொள்வது, அதைக் குறித்த கருத்துக்களைச் சொல்வது போன்றவை கல்வியாகும் .
கல்வி கற்றவர்களை நாம் கல்வியாளர் என்கிறோம் .இவற்றை கற்றுக்கொள்வதைப் படிநிலை , முதுநிலை ,முனைவர் நிலை என்று கல்வியை நாம் பகுத்து வைத்திருக்கிறோம் .இதையும் அடுத்த ,கல்விப்படிப்பை ஆய்வு ,ஆராய்ச்சி போன்ற சொற்களால் அழைக்கிறோம் .கல்வி கற்றவர்கள் உச்ச நிலை அடைவதில் நிபுணத்துவம் பெறுவதைத்தான் 'ஐக்யூ' என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள் . இந்த நிபுணத்துவம் மாணவர்களுக்கும் பணியில் சேருகிறவர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது .

அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் பொது அறிவு, கல்வி அறிவு போன்றவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் . அதற்காகவே மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பது நமது கனவாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் இதை திணிக்கிறோம். இது ஒருபுறம்.
அடுத்து, கல்வி கற்ற பின்பு , கல்வி கற்றாலும், கற்கா விட்டாலும் , வாழ்க்கைக்குத் தேவை தனிமனித ஒழுக்கம் . இதைத்தான் நாம் பண்பு என்கிறோம். நேர்மையாக வாழ்தல், சட்டவிதிகளை அனுசரித்தல் ,நண்பர்களை தேடுதல், நேரம் தவறாமை, காலத்தின் படி எல்லாவற்றையும் செய்தல் ,கடமைகளை முடிவாகவும் முழுமையாகவும் செய்தல், பெற்றோருக்கு கீழ்ப்படிதல், கல்வியை முறையாகவும் நேர்மையாகவும் கற்றல், போன்ற குணங்கள் தனி மனிதனுக்கு அவசியம் . இவற்றையே பண்பாடு என்கிறோம். மன இயலின்படி இதை எமோசனல் கோசன்ட் EQ என்கிறார்கள். இதை பண்பு அறிவு என்று நாம் கருதலாம் . இதுவே உணர்வு சார்ந்த அறிவு.

தனிமனிதன் கல்வியும் பண்பும் கற்றுக் கொண்டால் போதுமா ? வாழ்க்கையில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் . சமூகத்தில் மனிதன் உலாவரும் பொழுது அல்லது வீட்டை விட்டு அவன் வெளிவரும் போது அவன் சமூகத்துக்குள் வந்துவிடுகிறான். சமூகத்துக்கும் மனிதனுக்குமான தொடர்புகள் தான் சமூக அறிவு என்று நாம் சொல்கிறோம் .சக மனிதரிடம் அவன் கொண்டிருக்கின்ற நட்பு , அன்பு ,பகை ,பொறாமை போன்ற குணங்கள் சமூகப் பண்பாடு எனப்படும் .இதையே சோசியல் கோஸன்ட் 'SQ ' என்று மனவியல் கூறுகிறது .நாம் அதை ஒழுக்கம் என்று சொல்கிறோம்.
இப்பொழுது ஒரு மனிதன் கல்வி கற்கிறான், பண்புகளை வளர்த்துக் கொள்கிறான், நல்லொழுக்கத்துடன் இருக்கிறான், என்று நாம் வைத்துக்கொள்ளலாம். இவன் சமூகத்திற்குள் எப்படி வாழ்கிறான். பண்பும் ஒழுக்கமும் உள்ள மனிதர்கள், கல்வியறிவு இல்லாமலேயே வாழ்க்கையில் உயர்ந்து விடுகிறார்கள். இது சாத்தியமானதே .சிலநேரங்களில் பண்பும் ஒழுக்கமும் மிக்க மனிதர்கள் வாழ்க்கையின் உயர்ந்த கல்வியில் சிறந்த, அறிவில் சிறந்த மாணவர்களை தங்களின் கீழ் பணியாற்ற வைக்கிறார்கள். பண்பும், கல்வி ஒழுக்கமும், கல்வியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விடுகின்றன என்று சொல்லலாம் .கல்வி இல்லாமலேயே பண்பையும் ஒழுக்கத்தையும் தானாகப் பெற்றுக்கொள்ள முடியும் .இவற்றுடன் கல்வியும் சேர்ந்து கொண்டால் ஒரு தனி மனிதனுடைய வாழ்வு எப்படிச் சிறக்கும் என்பதை நாம் உணரலாம்.

வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி, பண்பு, ஒழுக்கம், மூன்று மட்டும் போதுமா? போதாது ..என்கிறது வாழ்க்கை .திறமையும் வேண்டும் .அந்தத் திறமை என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது .வாழ்க்கையுடன் போராடும் பொழுதும், வாழ்க்கையை எதிர்கொள்ளும் பொழுதும், அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது தான் திறமை. துன்பக் காலங்களிலும் துவண்டுவிடாமல் அவன் வாழ்க்கையின் வெற்றியை நோக்கி நகர வேண்டும் . இதைத்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று நாம் சொல்கிறோம் .இதையே அட்வர்சிட்டி கோஸன்ட் அல்லது வாழ்க்கை அறிவு 'AQ' என்று சொல்கிறார்கள். இந்த வாழ்க்கை அறிவை நாம் வகைப்படுத்தும் பொழுது, நாம் இன்பம்- துன்பம் மேல்-கீழ்
உயர்வு -தாழ்வு பொறுமை ,அன்பு ,சகிப்புத்தன்மை, திருப்தி , ஆனந்தம் போன்ற உணர்வுகளைப் பெறுகிறோம் .
துன்பத்தில் துவண்டு போவதும் வெற்றிபெற்று மகிழ்வதும் இதனுள் அடக்கம். ஆக நாம் காணும் வாழ்க்கையினுடைய அனைத்து கருத்துக்களும் இவற்றுள் அடங்கி விடுகின்றன. என்னதான் கல்வி அறிவும், பண்பாடும், ஒழுக்கமும் இருந்தாலும் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியடைய அவனுக்கு நிறைய திறமைகள் தேவைப்படுகின்றன. அதைத்தான் திறமையான வாழ்க்கை என்று நாம் கருதுகிறோம் .நல்ல அறிவு, நல்ல பண்பு, நல்ல ஒழுக்கம், நல்ல திறமை உள்ள மனிதர்களை நாம் தனியாக அடையாளப் படுத்துகிறோம் . அவர்களே மேதைகள் ஆகிறார்கள்;.ஞானிகள் ஆகிறார்கள்;. அறிஞர்கள் ஆகிறார்கள்;. வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

தூய்மையான மனம், தூய்மையான செயல், தூய்மையான சொற்கள், அன்பு, கருணை போன்றவற்றை வளர்த்துக் கொள்பவர்கள் தான் உலகத்திலே நாம் காணுகின்ற மகாத்மாக்கள் .ஒரு மகாத்மாவை உருவாக்குவது அறிவு தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .இந்த நான்கு விதமான அறிவுகளையும் பெற்றவர்கள் வாழ்க்கையில் தாழவும் முடியும், உயரவும் முடியும் .அது அவரவர் கையில் இருக்கிறது.
இதை நம் வழக்கப்படி அறிவு, ஞானம் என்று வரையறை செய்கிறோம், ஆங்கிலத்தில் Knowledge, Wisdom என்று இதை நாம் சொல்லலாம். வடமொழியில் புத்தி, ஞான் என்கிறார்கள்.
மனோதத்துவ இயல் ஆய்வாளர்கள் அறிவை நான்கு விதமாகப் பிரித்து ஒரு பிரமாண்டமான வார்த்தைகளில் சொல்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் இது நமது வாழ்க்கையில் நிரந்தரமாக உள்ள பண்புகளாகத்தான் இருக்கிறது . இந்த நான்கையும் நாம் வாழ்க்கையில் சர்வசாதாரணமாக நான்கு வார்த்தைகளில் சொல்லி விடுகிறோம். கல்வி ...பண்பு ...ஒழுக்கம் ...திறமை என்பவையே அவை.

இத்தனை கருத்துக்களையும் இரண்டே சொற்களில் சொல்லி விடலாம் . ஆனால் பொருளையும் அதனுடைய விளக்கத்தையும் நாம் சொல்கிறோம். உள்ளூர்க்காரர்கள் நான்கு வரிகளில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்.
" ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி …".
..(கல்வி அறிவு IQ)
"மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும் .ஒரு மாற்று குறையாத மனிதன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் …"(..பண்பு ஒழுக்கம் ...EQ/SQ)
" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் .உயர்ந்தாலும், தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்.." ( வாழ்வியல் அறிவு ..AQ. )
எது எப்படியோ நமது பிள்ளைகளை' ஐக்யு ' என்று மதிப்பெண் சார்ந்த கருத்தியலில் அடைக்காமல், அவர்களுக்கு ' இக் யூ , ' 'எஸ்க்யு' 'ஏக்யு ' ஆகியவற்றையும் கற்றுத் தருவதே உண்மையான கல்வியாகும் . அதுவே அறிவு சார்ந்த கல்வியாகும்.
பிள்ளைகளுக்காகத் தான் சாலைகள் ! சாலைகளுக்காகப் பிள்ளைகள் அல்ல ! புரிந்துகொள்வோம்... நேர் வழி வாழ்வோம் ..வளர்வோம் ..
தூய்மையும், நேர்மையும் நற்பண்புகளும் உள்ளடக்கிய அறிவின் உச்ச நிலை என்பது 'சித்தம்'. அதாவது சித்தி பெற்று சித்தர்கள் ஆகும் நிலை.
தூய்மையற்ற பிறழ்ந்த அறிவின் உச்ச நிலை 'பித்தம்'.அதாவது பித்தனாதல் . அப்போது கட்டாயம் மனதத்துவ மருத்துவர்கள் தேவை.
-கமலநாபன்,
(பத்மநாபசேகர் G)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.