Published:Updated:

`மாணவர்கள் காட்டில் விளையாடுகிறார்கள்; நூலகம் வேண்டும்' - ஐந்தாம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு

மாணவி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த காட்சி

தனது கிராமத்திற்கு நூலகம் அமைத்துத் தரும்படி, அரசுப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படுமென ஆட்சியர் பழனி உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமலைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி வருணிதா. தனது கிராம மாணவர்களுக்காக நூலகம் ஒன்றை அமைத்து தரும்படி, பொதுநலத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவர் அளித்துள்ள மனு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த மனுவில், "நான் திருமலைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறேன். எங்கள் ஊர் மாணவர்கள், பள்ளி நேரம் முடிந்ததும் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று விளையாடுகிறார்கள். அப்படி விளையாடும் போது, விஷ ஜந்துக்கள் மற்றும் காட்டு விலங்குகள் தாக்கும் அச்சம் நிலவுகிறது.

நூலகம்
நூலகம்
மாதிரி படம்

எனவே, 'நமது கிராமத்தில் ஒரு நூலகம் இருந்தால் மாணவர்கள் எல்லோரும் நூலகத்திற்குச் சென்று கற்பார்கள். தீய செயல்களில் ஈடுபடாமலும், காட்டுப்பகுதிக்குச் செல்லாமலும் இருப்பார்கள்' என்று என் மனதில் தோன்றியது. 

எனவே, எங்கள் ஊர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் எதிர்காலம் மென்மேலும் சிறப்பாக அமைந்திட நூலகம் ஒன்றை அமைத்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்று ஐயா அவர்களை இரு கரம் கூப்பி திருமலைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் பழனி - விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் பழனி - விழுப்புரம்

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பழனி, 'பள்ளிக்குக் கூடுதல் புத்தகங்கள் வழங்கி நூலகம் அமைக்கப்படும்' என உறுதியளித்தார். 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் பொது நலத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கும் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.