Published:Updated:

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, தமிழக மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா? அன்புமணி கண்டனம்

அன்புமணி ராமதாஸ்

``அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத்தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை" - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, தமிழக மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா? அன்புமணி கண்டனம்

``அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத்தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை" - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள 15 மாதிரி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 4-ம் நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்த நிலையில், இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில், இந்தக் கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாகச் செயல்பட உள்ளன.

உண்டு உறைவிட வசதியுடன் செயல்படும் மாதிரி பள்ளிகளில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் மாதிரி பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், மாதிரி பள்ளிகளில் சேர்வதற்கு, மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ``மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால்தான், அத்தேர்வை தமிழக அரசும், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்துக்கொண்டு, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி?

நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத் தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் புறக்கணிப் பதற்கானதாக இருக்கக் கூடாது!

நுழைவுத்தேர்வு | மாதிரி படம்
நுழைவுத்தேர்வு | மாதிரி படம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத்தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.