Published:Updated:

`அந்தக் கேள்விதான்..’-பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றிய ஆசிரியை; ப்ளஸ் டூவில் முதலிடம் பிடித்த மகன்

அரசுப் பள்ளி ஆசிரியை குடும்பம்

``ஒரு அம்மா, `எங்க பிள்ளைகளை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்றீங்க டீச்சர், சேர்க்கிறோம். ஆனா, உங்க பிள்ளைங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க, சொல்லுங்க?’னு கேட்டாங்க. அப்போ, லோகேஸ்வரன் பிரைவேட் ஸ்கூல்ல 10வது படிச்சிக்கிட்டு இருந்தான். எதுவுமே சொல்ல முடியலை.’’

Published:Updated:

`அந்தக் கேள்விதான்..’-பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றிய ஆசிரியை; ப்ளஸ் டூவில் முதலிடம் பிடித்த மகன்

``ஒரு அம்மா, `எங்க பிள்ளைகளை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்றீங்க டீச்சர், சேர்க்கிறோம். ஆனா, உங்க பிள்ளைங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க, சொல்லுங்க?’னு கேட்டாங்க. அப்போ, லோகேஸ்வரன் பிரைவேட் ஸ்கூல்ல 10வது படிச்சிக்கிட்டு இருந்தான். எதுவுமே சொல்ல முடியலை.’’

அரசுப் பள்ளி ஆசிரியை குடும்பம்

புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் மேகலா. இவர் தனியார் பள்ளியில் படித்து வந்த தன் மகன் மற்றும் மகளை, அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்த ஆசிரியை மேகலாவின் மகன் லோகேஸ்வரன் ப்ளஸ் டூ தேர்வில் 554 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார். அரசுப் பள்ளிமேல் நம்பிக்கை வைத்த முன்மாதிரி ஆசிரியைக்கும் மாணவருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உற்சாகத்தில் இருந்த ஆசிரியை மேகலாவிடம் பேசினோம்... ``இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணத்தாங்கோட்டை அரசுப் பள்ளியில் பணியாற்றிக்கிட்டு இருக்கேன்.

 லோகேஸ்வரன்
லோகேஸ்வரன்

மகள் கவிநயா ஸ்ரீ, ஒன்றாம் வகுப்பில் இருந்தே அரசுப் பள்ளியில படிச்சிக்கிட்டு இருக்கா. மகன் லோகேஸ்வரன் பிரைவேட் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு இருந்தான். லோகேஸ்வரனையும் அரசுப் பள்ளிக்கு மாத்திடலாம்னு யோசிச்சப்போ, எங்க வீட்டுக்காரர் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னாரு. `ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுவோம். பையனைக் கூட்டிக்கொண்டு விட்டுட்டு, திரும்ப கூட்டிக்கிட்டு வரணும். தனியார் பள்ளினா ஸ்கூல் முடிஞ்சா வேன்ல ஏறி வீட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்திடுவான். இப்போதைக்கு அங்கேயே படிக்கட்டும்’னு சொல்லிட்டாரு. நானும் விட்டுட்டேன்.

ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல் ஆரம்பிக்கிறதுக்குக் கொஞ்ச நாளுக்கு முன்னாடியே, ஆசிரியர்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று விடுவோம். பெற்றோர்களை சந்தித்து, எங்க பள்ளியோட சிறப்புகளை எடுத்துச் சொல்லி, எங்க பள்ளியில, அவங்க பிள்ளைகளைச் சேர்க்க வைப்போம்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஆவணத்தாங்கோட்டை பக்கத்துல இருக்க ஒரு ஊருக்கு போயிருந்தப்ப, ஒரு அம்மா, `எங்க பிள்ளைகளை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்றீங்க டீச்சர், சேர்க்கிறோம். ஆனா, உங்க பிள்ளைங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க, சொல்லுங்க?"னு கேட்டாங்க. அப்போ, லோகேஸ்வரன் பிரைவேட் ஸ்கூல்ல 10வது படிச்சிக்கிட்டு இருந்தான். எதுவுமே சொல்ல முடியலை.

மகன் 10வது முடிச்ச கையோடு, 11-ம் வகுப்புக்கு அவனை அரசுப் பள்ளியில் சேர்க்க நான் முடிவு பண்ணிட்டேன். முன்னாடியே, பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அரசுப் பள்ளிக்கு மாத்தணும்ங்கிறது எண்ணம் இருந்ததுதான். பையனோட விருப்பமும் இதுல முக்கியம்ல. `அரசுப் பள்ளியில படிக்கிறியாப்பா?’னு கேட்டேன். `எனக்கு ஓ.கே அம்மா’ன்னு சொல்லிட்டாரு. உடனே சேர்த்தேன். அடுத்தடுத்த வருஷம் பிரைவேட் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு இருந்த பல பிள்ளைங்களை மாற்றி எங்க ஸ்கூலுக்கு, பெற்றோர் அனுப்பி வச்சாங்க.

`அந்தக் கேள்விதான்..’-பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றிய ஆசிரியை; ப்ளஸ் டூவில் முதலிடம் பிடித்த மகன்

இன்னைக்கு என் பையன் கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியையான அம்மாவுக்கும் பெருமை சேர்த்திட்டாரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பம். நிச்சயம் அதுலயும் சாதிப்பாருங்கிற நம்பிக்கை வந்திருச்சு" என்கிறார் நெகிழ்ச்சியாக.

மாணவர் லோகேஸ்வரனிடம் பேசினோம். ``விருப்பப்பட்டுதான், கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குப் போனேன். பிரைவேட் ஸ்கூல்ல படிச்சிட்டு, கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாறுனதுல எந்த சிக்கலும் எனக்கு வரலை. ரெண்டு ஸ்கூலுக்கும் வித்தியாசம் எல்லாம் இல்லை. சொல்லப்போனா, பிரைவேட்ல கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்குற மாதிரி இருந்துச்சு. இங்க கொஞ்சம் சுதந்திரமா உணர முடிஞ்சது. அடுத்த இலக்கை அடைய தொடர்ந்து ஓடணும்" என்கிறார்.