தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்க உள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற அரசின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதோடு மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்களையும், ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் குறித்தும் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி, 20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் படிப்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!