Published:Updated:

`இங்கே தெரிவது கொஞ்சம்தான்'- தேனியில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவக் கழிவுகள்!

`இங்கே தெரிவது கொஞ்சம்தான்'- தேனியில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவக் கழிவுகள்!
News

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ளது சங்கராபுரம். இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆய்வில் இறங்கிய அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தனியார் தோட்டம் ஒன்றில் பல டன் எடைகொண்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதும், அதில் இருந்தே துர்நாற்றம் வீசுவதையும் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, இன்று காலை ஊரக வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வுசெய்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கேரளாவின் எடப்பள்ளி என்ற இடத்தில் இயங்கும் அமிர்தமாயி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்துதான் இந்த மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவக்கழிவுகளால் சுற்றுப்புற மக்களுக்கு எந்தவித தொற்று நோய்களும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதி சமூக ஆர்வலர்கள், ‘’இங்கே தெரிவது கொஞ்சம்தான். இந்த இடம் முழுவதையும் ஆய்வு செய்தால், பல நூறு டன் மருத்துவக்கழிவுகள் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கலாம். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சுற்றுவட்டார மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும்” என்றனர். தமிழக கேரள எல்லையில் கேரளாவின் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதை. தமிழக எல்லையைத் தாண்டி எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் தீவிர சோதனைக்கு உட்படுத்தும் கேரள காவல்துறைபோல, தமிழகத்துக்குள் வரும் கேரள வாகனங்களை ஏன் சோதனைக்கு உட்படுத்துவதில்லை? அதிகாரிகளின் துணையோடு தினம் தினம் கேரள குப்பைகளின் குப்பைத்தொட்டியாக தமிழகம் மாற்றப்பட்டுவருகிறது என்பதே நிதர்சனமான உண்மை!