Published:Updated:

``காணி நிலம் இல்லை எங்களுக்கு!’’ – கலெக்டரிடம் கண்ணீர் விட்ட தேயிலை தோட்ட விவசாயிகள்

``காணி நிலம் இல்லை எங்களுக்கு!’’ – கலெக்டரிடம் கண்ணீர் விட்ட தேயிலை தோட்ட விவசாயிகள்
News

மேகமலை தேயிலைத் தோட்ட விவசாயிகள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்துக் குடியிருக்க இடம் வேண்டும் என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மேகமலையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினக்கூலிகளாக வேலை செய்துவருகிறார்கள். இந்த நிலையில், நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த அவர்கள், குடியிருக்க இடம் வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஞானம், ``நான்கு தலைமுறையாக மேகமலையில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கிறோம். தேயிலை எஸ்டேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கம்பெனி வீட்டில்தான் தற்போது குடியிருந்து வருகிறோம். எங்கள் பிள்ளைகள் எங்களைப்போல இந்தத் தேயிலை தோட்டத்தில் கிடந்து கஷ்டப்பட வேண்டாம் என்று எண்ணி, சின்னமனூர், தேனி, கம்பத்தில் தங்க வைத்து நன்றாகப் படிக்க வைக்கிறோம். 60 வயதுக்கு மேல் இங்கே வேலை பார்க்க முடியாது. அதற்கு மேல் கம்பெனி வீட்டிலும் இடம் கிடையாது. அப்படி ஒரு சூழல் வரும்போது எங்கே செல்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. குடியிருக்கக் காணி நிலம் இல்லை. அது கிடைத்தால் போதும். நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போவோம். அதனால் தான் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்வதாக கூறினார். நல்லது நடந்தால் போதும்!” என்றார் ஏக்கத்தோடு.

மேகமலையில், ஹைவேவிஸ், அப்பர் மணலாறு, மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளில் பரந்து காணப்படும் தேயிலைத் தோட்டங்களில், தினக்கூலிகளாக வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மக்களின் பல ஆண்டு கோரிக்கை இது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?