
சுற்றுச்சூழல் பாதுகாப்பா, தொழில் வளர்ச்சியா... எது தேவை?
தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், இன்று நம் தேவை என்ன என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் 58% பேர் தொழில் வளர்ச்சியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் தேவை என்று கூறியுள்ளனர். ஆனால், தொழில் வளர்ச்சி என்று வந்துவிட்டாலே, சுற்றுச்சூழல் சிறிதளவாவது பாதிப்படையவே செய்யும். சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்காதபடி தொழிற்சாலைகளை நடத்தலாமே தவிர, அதற்கு சிறுதீங்கும் வராதபடி நடத்த முடியுமா என்பது சந்தேகமே!

இந்த சர்வேயில் 41% பேர் சுற்றுச் சூழல் பாதுகாப்புதான் தேவை என்று சொல்லியிருக்கின்றனர். சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகம் இருப்பதையே இது காட்டு கிறது. எந்தப் பாதிப்பும் இல்லாத பண்பட்ட சுற்றுச்சுழல் நோய்களில் இருந்து காக்கும். ஆனால், எல்லோ ருக்கும் வேலை தருமா?

இந்த சர்வேயில் 1% பேர் மட்டுமே தொழில் வளர்ச்சி தேவை என்று சொல்லியிருக்கின்றனர். அப்படி யானால், இனி நம் மாநிலத்தில் எந்தத் தொழிற்சாலையும் வரவேண்டாமா, நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டாமா?
தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் என இரண்டுமே முக்கியம் என 58% மக்கள் சொன்னது ஆரோக்கியமான விஷயமே. இதை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்!
- ஏ.ஆர்.கே