சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

குட்பை 2018 - இயற்கை

குட்பை 2018 - இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
News
குட்பை 2018 - இயற்கை

குட்பை 2018 - இயற்கை

குட்பை 2018 - இயற்கை

குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்ட பானங்களை அருந்தப் பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்றாக, தென்னை ஓலைகளில் ஸ்ட்ரா செய்து, மாநில அளவிலான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வானார், கரூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அனிதா. இதன்மூலம், ``கஜா புயலில் வீழ்ந்த பல்லாயிரம் டெல்டா தென்னை விவசாயிகளின் வாழ்விலும் ஒளியேற்ற முடியும்” என்கிறார் அந்த ஆசிரியை.

குட்பை 2018 - இயற்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, முன்னோடி இயற்கை விவசாயி, ‘நெல்’ ஜெயராமன், டிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார். இவர், 170-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளுக்குக் கொடுத்தவர்.

குட்பை 2018 - இயற்கை
குட்பை 2018 - இயற்கை

ந்த நூற்றாண்டில் கேரளா கண்ட மிகப்பெரிய பேரிடர், ஆகஸ்ட் மாதம் பெய்த மழை. ‘வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்  பலியானோர் எண்ணிக்கை 324’ என்று முதல்வர் பினராயி விஜயன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குட்பை 2018 - இயற்கை

மிழகத்தின் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குட்பை 2018 - இயற்கை

துவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா எப்படி மோசமான நீர் வறட்சியைச் சந்தித்ததோ, அதேபோன்ற மோசமான வறட்சியை 2018-ம் ஆண்டு சந்தித்துள்ளது  ஆஸ்திரேலியா.

குட்பை 2018 - இயற்கை

வ்வொரு வருடமும் மார்ச் 22-ம் தேதி, ‘உலக பூமி தினம்’ கொண்டாடப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற புவி தினத்தில், ‘பிளாஸ்டிக்கை ஒழிக்க’ முடிவெடுக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த முடிவு  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

குட்பை 2018 - இயற்கை

திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், மின்சார உற்பத்திக்காக மொத்தம் 6 அலகுகள் திட்டமிடப்பட்டன.   2 செயல்பாட்டில் இருக்க, மேலும் 2 அலகுகள் கட்டப்பட்டன. 2 அலகுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் 2 அலகில் சரிவர மின் உற்பத்தி நடைபெறாத நிலையில், கூடுதலாக அலகுகள் அமைப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குட்பை 2018 - இயற்கை
குட்பை 2018 - இயற்கை

டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் எடுக்க 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் இரண்டு இடங்கள், வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டவை. அடுத்த ஆண்டிலிருந்து இந்தப் பணி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லகிலேயே முதன்முறையாக ஒரு பெரிய நகரம், முற்றிலும்... சில சொட்டுகூட தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது’ என்ற செய்தியை வெளியானது. இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் டே ஜீரோ (Day Zero) என்றார்கள். தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுனில், இந்த ஆண்டு அரங்கேற இருந்தது. உலகில் அதிகமான தண்ணீர்ப் பஞ்சம் நிலவிய இடமும் கேப்டவுன்தான். மக்களின் பிரார்த்தனையால் முற்றிலும் வறண்டுபோகாமல் சற்றே தப்பித்துள்ளது.

குட்பை 2018 - இயற்கை

செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை புளோரன்ஸ் சூறாவளி தாக்கியது. அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கடற்கரை நகரமான வில்மிங்டன், வட கரோலினா மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்தப் புயலால் 17 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய புயல் இந்த ‘ஃபுளோரென்ஸ்’.

துரை.நாகராஜன்