Published:Updated:

`சிலைகளுக்குள் விதைகள்; இயற்கை வண்ணம்!' - அசத்தும் புதுக்கோட்டைத் தொழிலாளர்கள்

புதுக்கோட்டை அருகே துவரடிமனை கிராமத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் ரசாயன மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படாமல், முழுவதும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Idols of Ganesh
Idols of Ganesh

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கிறது துவரடிமனை கிராமம். இங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது, துவரடிமனையில் தொழிலாளர்கள் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மாவட்டம் முழுவதுமே மவுசு அதிகம்.

Idol making
Idol making

தற்போது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், சுற்றுவட்டாரக் கிராமங்கள் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் சிலைகள் செய்ய ஆர்டர்கள் வந்துள்ளன. இந்தநிலையில்தான் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சங்கரிடம் பேசினோம்,``3 குடும்பங்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியை ரொம்ப வருஷமா செஞ்சிக்கிட்டு இருக்கோம். இப்பத்தான், அரசாங்கம் ரசாயனப் பூச்சுகள் எல்லாம் கலக்காமல், களிமண், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றில் தயாரிக்கச் சொல்லி அறிவுறுத்துறாங்க.

Idols of Ganesh
Idols of Ganesh
`மாட்டுச் சாணத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்!’ - விருதுநகர் இளைஞரின் அசத்தல் முயற்சி

ஆனால், நாங்க பல வருஷமாகச் சுற்றுச்சூழக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணால்தான் விநாயகர் சிலைகள் செஞ்சிக்கிட்டு இருக்கோம். இயற்கை வண்ணம்தான் கொடுக்கிறோம். இந்த வருஷம் கொஞ்சம் புதுமையாக, சிலைகள் செய்யும்போது, அதில் விதைகளையும் வைத்துத் தயாரிக்கிறேன். 10 விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் 2 செடிகளாவது முளைக்கும்.

1அடி முதல் 10அடி உயரம் வரையிலும் தயாரிக்கிறோம். ஏர் ஓட்டும் விநாயகர், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் விநாயகர், குதிரை, யானை வாகனத்தில் விநாயகர் என மக்கள் எப்படிக் கேட்கிறார்களோ, அப்படியே சிலைகளைத் தத்ரூபமாகச் செய்து கொடுக்கிறோம். நாங்கள் செய்யும் சிலைகள் நேர்த்தியாக இருப்பதால், சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆர்டர் கொடுக்கின்றனர்.

கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம்... ஆவணி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoCards
Idols of Ganesh
Idols of Ganesh

விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரம்தான் இருக்கிறது என்பதால், இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும், விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே நாங்கள் பரபரப்பாக இருப்போம். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்துவிட்டால், எங்கள் பாடு திண்டாட்டம்தான். வேலை இருக்காது. களிமண்ணால் ஆன மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடும் எங்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.