Published:Updated:

தாடி வைத்த தான்சானியா காட்டு மாடுகள்..! ஆப்ரிக்கா காடுகளுக்குள் ஒரு விசிட்!

தான்சானியாவின் காட்டு மாடுகள்
News
தான்சானியாவின் காட்டு மாடுகள்

தான்சானியாவின் காட்டு மாடுகளின் எண்ணிக்கை 10 லட்சம், அதனுடன் வரிக்குதிரைகள் 1.5 லட்சம், மான்கள் 50,000, இவை அனைத்தும் இந்த நீண்ட நெடிய பயணத்தில், ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன, எதற்காக தெரியுமா?

Published:Updated:

தாடி வைத்த தான்சானியா காட்டு மாடுகள்..! ஆப்ரிக்கா காடுகளுக்குள் ஒரு விசிட்!

தான்சானியாவின் காட்டு மாடுகளின் எண்ணிக்கை 10 லட்சம், அதனுடன் வரிக்குதிரைகள் 1.5 லட்சம், மான்கள் 50,000, இவை அனைத்தும் இந்த நீண்ட நெடிய பயணத்தில், ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன, எதற்காக தெரியுமா?

தான்சானியாவின் காட்டு மாடுகள்
News
தான்சானியாவின் காட்டு மாடுகள்

இந்தத் தொடரின் உயிர் நாடி "காட்டு மாடுகள்" அந்த காட்டு மாடுகளின் பயணத்தை சொல்வதுதான் இந்தத் தொடர். இப்போது காட்டு மாடுகளை பற்றி அறிந்துகொண்டு  பயணம் செய்வோம்.

" Wildebeest" தமிழில் சிறு" காட்டுமாடு" என வைத்துக்கொள்வோம். என்னுடன் பயணித்த ஒரு நண்பர் அதை "தாடிவைத்த மாடு" என அழைத்தார் அதுவும் நல்ல பெயர்தான்.

காட்டு மாடுகள்
காட்டு மாடுகள்

Wildebeest, இன்னொரு பெயர் GNU. இது ஏற்படுத்தும் சத்தத்தை வைத்து இந்த பெயர் வந்திருக்கலாம். இதன் அறிவியல் பெயர் connochaetes taurinus,  ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் இந்தச் சிறு காட்டு மாடுகள், 8 அடி  நீளம் 4 அடி உயரம் கொண்டவை. கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ எடை இருக்கும். மாடுகள் என இதை நாம் அழைத்தாலும் இது ஒரு மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு. இருபது வருடங்கள் உயிர்வாழும் இவை, கிழக்கு, தெற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் அதிக அளவில் உள்ளன. பெரிய குழுக்களாக மேய்ந்து கொண்டே நகரும் இவை, இரவிலும் சுறுசுறுப்பாக புற்களை மேய்ந்து கொண்டே இருக்கும். இதன் வலசை செல்லும் பாதை 800 கிலோ மீட்டர் .

தான்சானியாவில், நுடுத்து (Nduthu) பகுதியில் பிறந்து செரங்கெட்டி தேசியப் பூங்கா முழுவதும் சுற்றி கென்யாவின் மசாய் மாரா சென்று, திரும்பவும், தான் பிறந்த நுடுத்து பகுதிக்கே திரும்பி வருகின்றன  காட்டு மாடுகள். எதற்காக இந்த 800 கிலோ மீட்டர் பயணம்?

தான்சானியாவில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை 10 லட்சம், அதனுடன் வரிக்குதிரைகள் 1.5 லட்சம், மான்கள் 50,000, இவை அனைத்தும் இந்த நீண்ட நெடிய பயணத்தில், ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன, எதற்காக தெரியுமா ?

தாடிவைத்த மாடு| அம்மாவுடன் ஊர்வலத்தில்...
தாடிவைத்த மாடு| அம்மாவுடன் ஊர்வலத்தில்...

இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு உணவும், தண்ணீரும் மிகப்பெரிய அளவில் தேவை! எனவேதான், உணவுக்காக, தண்ணீருக்காக, அவை ஊர்வலம் செல்கின்றன. இந்த மாடுகள் பிறக்கும் நுடுத்து (Nduthu) பகுதியானது, கோரங் கோரோ (NGORONGORO) கன்சர்வேஷன் ஏரியா அருகே உள்ளது. நவம்பரில் பெய்யும் குறுகியகால (SHORT RAIN) மழை, இந்தப் பகுதியில் புற்கள் வளர உதவுகிறது. புற்களை உண்பதற்காக ஜனவரி முதல் மார்ச் வரை இங்கு காட்டு மாடுகள் முகாம் இடுகின்றன.

இங்குதான் புதிய உயிர்கள் பிறக்கின்றன. ஆம் ஒரு நாளைக்கு 8000 குட்டிகள் சராசரியாக இங்கு பிறக்கின்றன. பிறந்த ஐந்து நிமிடத்தில் எழுந்து அம்மாவுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன இந்தக் குட்டிகள். பால் குடிக்க கூட நேரமின்றி அம்மாவுடன் நடக்க ஆரம்பிக்கின்றன. 

அம்மாவுடன் ஊர்வலத்தில்...
அம்மாவுடன் ஊர்வலத்தில்...

குட்டிகள் சற்று சோர்ந்துவிட்டால் இவற்றைச் சாப்பிட வேட்டை விலங்குகள் ஆயிரக்கணக்கில் அங்கு முகாமிட்டுள்ளன. பிப்ரவரி மாதம் முழுவதும் பிறக்கும் இந்தக் குட்டிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 10 லட்சம் இருக்கும். இவற்றில் 30 முதல் 40% குட்டிகள் மட்டுமே உயிர் பிழைக்கின்றன. 60% குட்டிகள் வேட்டை விலங்குகளுக்கு உணவாகின்றன. 40 சதவிகித குட்டிகளும் எப்படி பிழைக்கின்றன?  என்பது ஆச்சரியமானது.

விலங்குகளின்  ஊர்வலத்தில் ஆரம்ப புள்ளியான நுடுத்து.
விலங்குகளின்  ஊர்வலத்தில் ஆரம்ப புள்ளியான நுடுத்து.

1. ஒரே மாதத்தில் அனைத்துக் குட்டிகளும் பிறப்பதால் வேட்டை விலங்குகளுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை உண்பது கடினம்.

 2. 10 லட்சம் குட்டிகள் பிறக்கும்போது வெளித்தள்ளப்படும் 10 லட்சம் நஞ்சுக் கொடிகள் (PLACENTA) இங்குள்ள நரி, கழுதைப் புலிகள் போன்ற சிறிய வேட்டை விலங்குகளுக்கு ஓர் எளிய உணவு. எனவே வயிறு நிறைந்து விடுவதால் அவை குட்டிகளை வேட்டையாடுவதில்லை.

தாடி வைத்த 
தான்சானியா காட்டு மாடுகள்..!
ஆப்ரிக்கா காடுகளுக்குள் ஒரு விசிட்!

3. பல லட்சம் விலங்குகள் ஒரே இடத்தில் இருப்பதால் வேட்டை விலங்குகளிடமிருந்து ஒரு சமூகப் பாதுகாப்பு கிடைக்கிறது.

 சரி ஒரு வருடத்தில் 10,00,000 குட்டிகள். அப்போது ஐந்து வருடங்களில் 50,00,000 மாடுகள் உருவாகி இருக்க வேண்டுமே? அங்குதான் இயற்கை சமன் செய்கிறது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆந்தராக்ஸ் (ANTHRAX) மாதிரியானஉயிர்க் கொல்லி  நோய்கள் வந்து, அதன் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஆம் 50 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயிர்க்கொல்லி நோய் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

குட்டிகள், காட்டு மாடுகளுடன் இணைய, 2 லட்சம் வரிக்குதிரை களும், 50,000-க்கும் மேற்பட்ட மான்களும் சேர்ந்து இந்தப் பகுதியில் உள்ள புல்வெளியைக் காலி செய்து,மார்ச் மாதம் இறுதியில் பெரும் கூட்டமாக செரங்கெட்டி தேசிய பூங்கா பகுதிகளில் நுழைகின்றன.

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய புலிகள் சரணாலயம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம். 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 1995-ம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் [Buffer zone management] தொடங்கப்பட்டு காடுகளின் வெளி வட்ட பாதையில் இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார மேம்பாடு செய்யப்பட்டது.

களக்காடு வனச்சரகம்
களக்காடு வனச்சரகம்

காடுகளுக்குள் மக்கள் செல்லவில்லையாதலால், காடு பாதுகாக்கப்பட்டது. வறண்டு போயிருந்த தாமிரபரணி ஆறு மீண்டும் உயிர் பெற்று, இன்று வற்றாத ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது [இதுபற்றி ஏற்கனவே நான் முதல் அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறேன்]. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் (The Best coexistence and buffer zone management) முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு காடுகளின் வெளி வட்ட பாதையில் வாழ்வாதார மேம்பாடு செய்யப்பட்டால் காடு பாதுகாக்கப்படும் என்பதற்கு நமது தாமிரபரணியும், ஆப்பிரிக்காவின் தான்சானியாவும் நான் கண்ட நேரடி சாட்சிகள்.

காட்டு மாடுகளை வேட்டையாடும் சிவிங்கி புலிகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? இந்தியாவில் அதன் இனம் அழிந்து போனதற்கான காரணம் என்ன? அடுத்த அத்தியாயத்தில் இதை தெரிந்து கொண்டே நாமும் காட்டு மாடுகளுடன் பயணிப்போம்.

-Dr.மணிவண்ணன்