Published:Updated:

மும்பை தெருக்களில் உலா வந்த சிறுத்தை: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை ஊழியர்கள்!

பிடிபட்ட சிறுத்தை

உணவைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இரவு நேரங்களில் சிறுத்தை வந்துவிடுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தெருக்களில் சிறுத்தை ஒன்று நடமாடியது. அதை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மக்கள் தெரிந்துகொண்டனர்.

Published:Updated:

மும்பை தெருக்களில் உலா வந்த சிறுத்தை: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை ஊழியர்கள்!

உணவைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இரவு நேரங்களில் சிறுத்தை வந்துவிடுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தெருக்களில் சிறுத்தை ஒன்று நடமாடியது. அதை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மக்கள் தெரிந்துகொண்டனர்.

பிடிபட்ட சிறுத்தை

மும்பையில் புறநகர் பகுதியான கோரேகாவில் அடர்ந்த காடு இருக்கிறது. இந்தக் காட்டில் சிறுத்தைகள் அதிக அளவில் வசிக்கின்றன. அவை அடிக்கடி அங்கு குடியிருப்பவர்களை தாக்குவதுண்டு. இதில் பலர் இறந்திருக்கின்றனர்.

சிறுத்தையுடன் வனத்துறையினர்
சிறுத்தையுடன் வனத்துறையினர்

அதோடு அருகில் உணவைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் இரவு நேரங்களில் சிறுத்தை வந்துவிடுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தேரி பவானி நகர் தெருக்களில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் நடமாடியது. அதை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மக்கள் தெரிந்துகொண்டனர். அந்த சிறுத்தை யாரையும் தாக்காமல் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது. ஆனாலும், இது குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதோடு அப்பகுதி மக்களே இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இரவில் வெளியில் வர அச்சம் அடைந்தனர்.

அந்தேரி மட்டுமல்லாது தீன்தோஷி பகுதியிலும் மக்கள் சிறுத்தையைக் காண நேர்ந்தது. இதையடுத்து அந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அந்தேரி, தீன்தோஷி, மலாடு போன்ற பகுதியில் கூண்டு வைத்தனர். வனத்துறை அதிகாரி கிரிஜா தேசாய் தலைமையில் அக்கூண்டுகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

பிடிபட்ட சிறுத்தை
பிடிபட்ட சிறுத்தை

அதோடு இரவில் கூண்டு அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமராவையும் கண்காணித்து கொண்டிருந்தனர். தீன்தோஷி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. உடனே அந்த சிறுத்தையை வனத்துறை ஊழியர்கள் போரிவலியில் உள்ள தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து சிறுத்தையை மீண்டும் காட்டுக்குள் விடுவதா அல்லது அதைப் பராமரிப்பு மையத்துக்கு அனுப்புவதா என்பது குறித்து வனத்துறையினர் முடிவு செய்வார்கள். இப்போது பிடிபட்ட சிறுத்தை அந்தேரியில் தென்பட்டதா என்று தெரியவில்லை. எனவே, அந்தேரி பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சிறுத்தைக்கான கூண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.