Published:Updated:

தேனி - கும்பக்கரையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

​கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை​ விதித்துள்ளனர்.

Published:Updated:

தேனி - கும்பக்கரையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

​கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை​ விதித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ​கும்பக்கரை அருவி​ உள்ளது. கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில்​​​ ​வார இறுதிநாள்களில் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு
திடீர் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில் ​ஞாயிற்றுக்கிழமை​ ​விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இந்நிலையில் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று பிற்பகலில் திடீரென கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், அருவி பகுதியில் ​தொடர்ந்து ​லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அருவியில் கண்காணிப்புப் பணியில் ​​வனத்துறையினர்​ ​​ஈடுபட்டிருந்த​னர். அப்போது திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழலை உணர்ந்து பிரதான அருவி மற்றும் மேற்குப் பகுதியில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்

இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவியின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.‌