Published:Updated:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 26 மாவட்டங்களில் கனமழை! - வானிலை ஆய்வு மையம் தகவல்

23 மாவட்டங்களுக்குக் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்க்கிறது.

Published:Updated:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 26 மாவட்டங்களில் கனமழை! - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்க்கிறது.

23 மாவட்டங்களுக்குக் கனமழை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பிருக்கிறது. இது வரும் நாளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

கனமழை
கனமழை

வட தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த மூன்று நாள்களுக்கு, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கனமழை
கனமழை

சென்னையைப் பொறுத்தவரை காலை முதலே நகரின் பெரும்பாலான இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, வேலூரிலும் மதியம் 3 மணிக்கு மேல் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.