Published:Updated:

கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja

கஜா துயரச் சுவடுகள்

பசி, இருள், குளிர், உடல் உபாதைகள் அவர்களை வதைத்தெடுத்தன. அப்போதைய துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க, பீனிக்ஸ் பறவைகளாகத் தாங்களே களம் இறங்கினார்கள்.

Published:Updated:

கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja

பசி, இருள், குளிர், உடல் உபாதைகள் அவர்களை வதைத்தெடுத்தன. அப்போதைய துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க, பீனிக்ஸ் பறவைகளாகத் தாங்களே களம் இறங்கினார்கள்.

கஜா துயரச் சுவடுகள்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், 'மெய்ச்சுடர்' நா.வெங்கடேசன் என்ற வாசகர், "கஜா புயலுக்குப் பிறகு மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்களிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

நவம்பர் 15 நள்ளிரவு, 16-ம் தேதி விடியல் தொடங்கிய தருணத்தில்... ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுமையும் அதுவரை சந்தித்திராத ஒரு பெருந்துயரைச் சந்தித்தது. காவிரி விவகாரம், உற்பத்திக்குறைவு எனப் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்த அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக புரட்டிப்போட்டது கஜா புயல். மறுநாள் விடியலின்போது, சுற்றிலும் விழுந்துகிடந்த மரங்களைக் கண்டு மனமொடிந்து போனார்கள் மக்கள். பலரது வீடுகள் தரைமட்டமாகி மயிரிழையில் சிலர் உயிர் பிழைத்தார்கள். பல உயிர்கள் காற்றோடு காற்றாகப் போயின. ஒட்டுமொத்தமாக காவிரிப்படுகையை குலைத்துப்போட்டது கஜா புயல்.

கஜா புயலால் 63 பேர் உயிரிழந்தார்கள்.
கஜா
கஜா
Doubt of common man
Doubt of common man
கஜா புயல் 1.4 லட்சம் பறவைகள் மற்றும் விலங்குகளின் உயிரைப் பறித்தது.

காவிரிப் படுக்கைக்கான மொத்த தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அதனால் ஊடகங்களின் பார்வைகூட இந்தப் பகுதியின் மேல் விழவில்லை. தமிழக அரசின் மீட்புப்பணிகளும் நிவாரண உதவிகளும் உடனடியாகக் கிடைக்கவில்லை. மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மனிதநேயர்களிடமிருந்து ஏராளமான உதவிகள் குவியத் தொடங்கின. புயல் தாக்கிய அடுத்த சில மணிநேரங்களிலேயே ஓடோடிச்சென்று உதவியவர்கள் ஏராளம். தனிப்பட்ட நபர்கள், வணிகர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பல தரப்பினரும் நிவாரணப் பொருள்களை வாரி வழங்கினார்கள்.

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்கள், உறவினர்களிடமிருந்தும் நிதி பெற்று, நிவாரண உதவிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். புயல் பாதித்த கிராமங்களில் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல்வலி, உடல் அரிப்பு உள்ளிட்டவற்றால் துன்பப்பட்ட மக்களுக்கு மாத்திரைகளையும் வழங்கி நெகிழவைத்தார்கள். மரங்கள் அகற்றும் பணியிலும் தன்னார்வலர்கள் இரவு-பகல் பார்க்காமல் செயல்பட்டார்கள்.

கஜா புயல் தாக்கிய தருணத்தில் 3.78 லட்சம் பேர் 556 நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்
32.706 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
Doubt of common man
Doubt of common man

மனிதநேய உதவிகள் ஒருபுறம் குவிந்தாலும்கூட, தமிழக அரசின் மிகவும் மெத்தனமான போக்கால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளானார்கள். கொசுக்கடியிலும், பனியிலும் மழையிலும் இவர்கள் பட்ட துன்பமும் பரிதாப நிலையும் பார்ப்போர் நெஞ்சைப் பதறவைத்தது. புயல் தாக்கி 12 நாள்களுக்கு மேலாகியும்கூட, தமிழக அரசின் எந்த ஒரு உதவியும் பெரும்பாலான கிராமங்களுக்குக் கிடைக்கவில்லை. குமுறிக்கிடந்த மக்கள் கொதித்தெழுந்தார்கள். திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பருத்திச்சேரி, தண்டளைச்சேரி, கண்ணந்தங்குடி போன்ற பகுதிகளில் அது வெளிப்படையாக எதிரொலித்தது.

3.41 லட்சம் குடிசைவீடுகள் பாதிக்கப்பட்டன.
கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்

'உடனடியாக அரசின் உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்கு அமைச்சர் காமராஜ் இங்கு நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு ஏராளமான வாகனங்கள் தடைபட்டு நின்றன. அடுத்த சில மணி நேரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தச் சாலையின் வழியாகத்தான் திருவாரூர் சென்றாக வேண்டும். மக்களை எப்படியாவது சமாதானம் செய்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அங்கு வந்தார் காமராஜ். கூடியிருந்த மக்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். டெல்டா முழுவதும் அமைச்சர்களுக்கு இதேபோன்ற வரவேற்புதான் கிடைத்தது.

1.3 லட்சம் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்
30,000 ஹெக்டேர் தென்னை மரங்கள் அழிந்தன.

தமிழக அரசு வழங்கிய 27 வகையான நிவாரணப் பொருள்கள், பல வாரங்கள் கடந்து மிகவும் தாமதமாகத்தான் வழங்கப்பட்டன. அதுவும்கூட, புயலால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. இதில், ஏராளமான ஊழல். நிவாரணப் பெட்டியில் பல பொருள்கள் மாயமாகி இருந்தன. மிச்சமிருந்த பொருள்களும் தரமற்றதாக இருந்தன. இதனால், டெல்டா முழுவதும் பரவலாகப் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதுமட்டுமல்ல, மறுசீரமைப்புப் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. சேதமடைந்த வீடுகள், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தமிழக அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில், சேதமடைந்த வீடுகளுக்கு 100 கோடி, பயிர்ச் சேதத்திற்கு 350 கோடி, உயிர் மற்றும் உடைமை சேதங்களுக்கு 205.87 கோடி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்புக்கு முதல்கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டது. நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு, மிகவும் குறைவான தொகையைத்தான் மத்திய அரசு வழங்கியது.

இன்று வரையிலும் பல குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவே இல்லை. தென்னை உள்ளிட்ட மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் பலருக்குக் கிடைக்கவில்லை. அதேசமயம், இதையே எதிர்பார்த்துக்கொண்டு மக்கள் முடங்கிக் கிடக்கவில்லை.

11.32 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கஜா சுவடுகள்
கஜா சுவடுகள்

துயரங்கள் தொடர்ந்தாலும், தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க, பீனிக்ஸ் பறவைகளாகத் தாங்களே களம் இறங்கினர். விவசாயத்தின் உயிர்நாடியான நீர்நிலைகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் தூர்ந்து கிடந்த குளங்களுக்கும் ஏரிகளுக்கும் உயிர் கொடுத்துள்ளார்கள். இதனால், டெல்டா மாவட்டங்களில் தற்போது நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் புத்துயிர்பெற்றுள்ளன. புதிதாக நடப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள் வேர்பிடித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

Doubt of common man
Doubt of common man