Published:Updated:

'மாண்டஸ் புயல்': அவசர உதவி எண் வெளியீடு - சென்னை மாநகராட்சி

மாண்டஸ் புயல்

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Published:Updated:

'மாண்டஸ் புயல்': அவசர உதவி எண் வெளியீடு - சென்னை மாநகராட்சி

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மாண்டஸ் புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்தாலும் பின்னர் படிப்படியாக மழை குறைந்து காணப்பட்டது. மழை குறைந்துள்ள நிலையில் பனிப்பொழிவு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று காலை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ வேகத்திலிருந்து 11 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. மாண்டஸ்  புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக  அதிகரிக்கக்கூடும் எனவும், வட தமிழக கடற்கரைப் பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர்  கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகளும், 169 நிவாரண மையங்களும் தயார்நிலையில் உள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும். பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் மழையின்போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற  வாடஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்"  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.