Published:Updated:

தமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு? அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது? #DoubtOfCommonMan

அணைகள்
News
அணைகள்

தமிழகத்தின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 24,864 மில்லியன் கன மீட்டர் நீரைச் சேமித்து வைக்கத் தகுந்த அணை, குளம், ஏரி, ஆறு போன்ற மேற்பரப்பு நீர்த்தேக்க வசதிகள் உள்ளன.

Published:Updated:

தமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு? அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது? #DoubtOfCommonMan

தமிழகத்தின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 24,864 மில்லியன் கன மீட்டர் நீரைச் சேமித்து வைக்கத் தகுந்த அணை, குளம், ஏரி, ஆறு போன்ற மேற்பரப்பு நீர்த்தேக்க வசதிகள் உள்ளன.

அணைகள்
News
அணைகள்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "தமிழகத்தின் சராசரி மழை அளவு எவ்வளவு? தென்னிந்தியாவில் அதிகளவு மழை பெறும் மாநிலம் தமிழகம் என்கிறார்களே, உண்மையா? தமிழகத்தில் உள்ள அணைகளில் எவ்வளவு நீர் சேமித்து வைக்கப்படுகிறது... எவ்வளவு நீர் வீணாகக் கடலில் கலக்கிறது?" என்ற நீண்ட கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் அப்துல் ரகுமான். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

பருவமழையை அதிகமாக நம்பியிருக்கின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். பருவ மழை பொய்த்தால் அதிக சேதங்களையும் இழப்புகளையும் சந்திக்கின்ற மாநிலங்களிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. இத்தகைய நிலையில், மற்ற மாநிலங்களைவிட நாம் அதிகமாகவே மழை நீரை நம்பியுள்ளோம். தமிழ்நாட்டின் சராசரி மழையளவு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்றழைக்கப்படும் பிரதீப் ஜானிடம் பேசினோம்.

இதுவரை இந்த ஆண்டு 901 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவை எட்ட இன்னும் 13 மில்லிமீட்டர் தேவை.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

"தமிழகத்தின் சராசரி மழையளவு 914 மில்லி மீட்டர். தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களாகப் பிரிந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவு வேறுபடும். அவற்றின் சராசரியைக் கணக்கிட்டு தமிழகத்தின் மழை அளவை குறிப்பது வழக்கம்.

தென்மேற்குப் பருவமழை!
தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டிலுள்ள அவலாஞ்சி மற்றும் வால்பாறையில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் பருவமழையையே அதிகம் நம்பியுள்ளது. உதாரணமாக ஓர் ஆண்டில் பருவமழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் மழை அளவு கணிசமாகக் குறைந்துவிடும். தமிழகத்தின் மொத்த மழை அளவில் 47 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் அதிகம் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளது. தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டிலுள்ள அவலாஞ்சி மற்றும் வால்பாறையில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்த்து, புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்கிறது.

இதுவரை இந்த ஆண்டு 901 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவை எட்ட இன்னும் 13 மில்லிமீட்டர் தேவை. கடந்த ஆண்டு 802 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. 2017-ம் ஆண்டு 973 மில்லிமீட்டர் பதிவானது. இது சராசரியைவிட சற்று அதிகம். ஒவ்வோர் ஆண்டும் மழையின் சராசரி அளவு வேறுபடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 2016-ம் ஆண்டு மிகக் குறைவான மழை (535 மில்லி மீட்டர்) பதிவாகியுள்ளது.

மழை
மழை

தென்னிந்தியாவில் அதிக மழைபெறும் மாநிலம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அதிக அளவு மழையும் அதன் உள் பிரதேசங்களில் குறைந்த அளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இதுபோன்ற நிலை உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பருவ மழையை அதிகம் நம்பியுள்ளது" என்கிறார் அவர்.

Doubt of common man
Doubt of common man

கடலில் கலக்கும் ஆற்று நீரையும் மழை நீரையும் சேமிப்பது எவ்வாறு?

"பெரும்பான்மையானோர், 'ஆற்றுநீர் கடலில் கலந்து வீணாகிறது. முறையாக அணைகள் அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்துகின்றனர். அதற்கு முன் நாம் இயற்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். ஆற்று நீரை கடலில் கலக்க விடாமல் அணைகளை எழுப்பி முழுவதுமாக சேமிப்பதாக வைத்துக்கொள்வோம். இதனால் ஆறுகளுக்கு அருகிலுள்ள நிலத்தடி நீர் சேமிப்பு பெரிதும் பாதிக்கப்படும். தமிழகத்தில் சுமார் 116 அணைகள் இருக்கின்றன. அவற்றில் போதுமான அளவு நீரைச் சேமித்துவிட்டு மீதியிருக்கும் ஆற்றுநீரை அதன் போக்கில் விட்டுவிடுவது சிறந்தது. இதன் மூலம் நிலத்தடி நீர் பெருகும். வறட்சிக் காலங்களிலும் இந்த நீர் உபயோகப்படும். அனைத்து நீரையும் நம்மால் சேமித்து வைத்துவிட முடியாது. இதுதான் இயற்கையின் நியதி. அந்த இயற்கை நியதியைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் பிரதீப் ஜான்.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!