Published:Updated:

How to: வீட்டில் செல்லப்பிராணியின் ரோமம், எளிதாக அகற்றுவது எப்படி? | How To Remove Pet Hair At Home?

செல்லப்பிராணி
News
செல்லப்பிராணி

வீட்டில் மெத்தை, மேசை, கார்ப்பெட் என அனைத்து இடங்களிலும் பரவி இருக்கும் செல்லப்பிராணிகளின் ரோமங்களை அகற்ற சில வழிகளைப் பார்ப்போம்.

Published:Updated:

How to: வீட்டில் செல்லப்பிராணியின் ரோமம், எளிதாக அகற்றுவது எப்படி? | How To Remove Pet Hair At Home?

வீட்டில் மெத்தை, மேசை, கார்ப்பெட் என அனைத்து இடங்களிலும் பரவி இருக்கும் செல்லப்பிராணிகளின் ரோமங்களை அகற்ற சில வழிகளைப் பார்ப்போம்.

செல்லப்பிராணி
News
செல்லப்பிராணி

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதே நேரம், அவற்றின் ரோமம் வீடெங்கும் பரவி இருக்கும் பிரச்னை உள்ளது. இதனை பலருக்கும் எதிர்கொள்ளத் தெரிவதில்லை. துடைப்பம் கொண்டு வீட்டை பெருக்கினாலும், அந்த ரோமங்கள் தங்கிவிடுகின்றன. குறிப்பாக மெத்தை, மேசை, கார்ப்பெட் என வீட்டில் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கின்றன. அவற்றை அகற்ற சில எளிமையான வழிகளைப் பார்ப்போம்...

செல்லப்பிராணி பராமரிப்பு
செல்லப்பிராணி பராமரிப்பு

ஈரமான கையுறை

நாய், பூனை என நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் ரோமங்கள் மெல்லியதாக, சிறியதாக இருக்கும். மே சை, மெத்தைவிரிப்பு, தரை என பல இடங்களில் பரவி இருக்கும் அவற்றை வெறும் கைகளால் சுத்தம் செய்வது சற்று கடினமானது. இதனால் அவற்றை அகற்றுவதற்கு ஈரப்பதமான கையுறைகளைப் பயன்படுத்தலாம். இப்படி ஈரமான கையுறையுடன் வீட்டில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் தேய்க்கும்போது, அவை ஒட்டிக்கொண்டு வந்துவிடும். இதன் மூலம் ரோமங்களை கைகளால் சுத்தம் செய்வது எளிதாகும்.

வேக்வம் க்ளீனர்

ரோமங்களை அகற்ற மிகச் சிறந்த வழி வேக்வம் கிளீனரை பயன்படுத்துவது தான். நல்ல அழுத்தமுள்ள வேக்வம் கிளீனர் கொண்டு பொறுமையாக ஒவ்வோர் இடத்திலும், குறிப்பிட்ட நேரம் எடுத்து சுத்தம் செய்யவும். வீட்டில் பெட் அனிமல்ஸ் இருப்பவர்கள், வேக்வம் க்ளீனரை வாங்கும்போதே ரோமங்களை சுத்தம் செய்வது போன்ற மாடலை கேட்டு வாங்கவும். சில கிளீனர்களில் ரோமங்களை சுத்தம் செய்யும் அம்சம் இருப்பதில்லை.

லின்ட் ரோலர் (Link Roller)

சில நேரங்களில் ஜன்னல்கள், சுவர்கள் எனவும் ரோமங்கள் இருக்கும். மேலும் கால் மிதியடி, மூலைகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். இதை அகற்ற லின்ட் ரோலர் உதவும். நீளமான கைப்பிடி கொண்ட இந்த லின்ட் ரோலர் மூலம் எளிதாக சுத்தம் செய்யலாம். இதனை ரோமங்கள் இருக்கும் இடங்களில் வைத்து ரோல் செய்தால் ரோமங்கள் வந்துவிடும்.

ஆன்டி ஸ்டேடிக் கிளீனிங் ஸ்ப்ரே

மேசை மற்றும் நாற்காலிகள் போன்ற மரப் பொருள்களில் இருந்து செல்லப்பிராணிகளின் முடியை சுத்தம் செய்ய, மென்மையான துணி மற்றும் ஆன்டி-ஸ்டேடிக் கிளீனிங் ஸ்பிரேயை (Antistatic cleaner spray) எடுத்துக் கொள்ளுங்கள். அதை ரோமங்கள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்து பின் வேக்வம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்தால் நீங்கிவிடும்.

ஃபேப்ரிக் கிளீனர் 3 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை சிறிது நீரில் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதனை ரோமங்கள் இருக்கும் கார் சீட், மேசைகளில் ஸ்ப்ரே செய்து பின் டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் அதனுடன் ரோமம் வதுவிடும்.

செல்லப்பிராணி வளர்ப்பு
செல்லப்பிராணி வளர்ப்பு

டிப்ஸ்...

* அடிக்கடி வீட்டிற்கு வெளியே செல்லப்பிராணியைக் கூட்டிச் சென்று, சீப்பு கொண்டு அவற்றின் உடல்முழுவதும் சீவி விடுங்கள். இதனால் உதிரும் ரோமங்கள் வீட்டிற்குள் சேர்வது தவிர்க்கப்படும்.

* செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் ரோமம் ஒட்டிக்கொள்ள நேரிடும் வெல்வெட் சோபாக்கள், கம்பளிகள் போன்றவற்றிற்கு மாற்றாக வேறு வகையிலான மெட்டீரியலிலான சோபாக்களை, போர்வைகளை பயன்படுத்தலாம்.

* சுத்தம் செய்வதற்கு கடினமான இடங்களை கவர் செய்து வைக்கலாம்.