Published:Updated:

குடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி? #DoubtOfCommonMan

நீர்நிலை
News
நீர்நிலை

பல இடங்களில் தன்னார்வலர்கள், விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை, தங்கள் செலவிலேயே தூர்வாரிக்கொள்கிறார்கள். சில தனியார் நிறுவனங்களும் நீர்நிலைகளைச் சீரமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன.

Published:Updated:

குடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி? #DoubtOfCommonMan

பல இடங்களில் தன்னார்வலர்கள், விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை, தங்கள் செலவிலேயே தூர்வாரிக்கொள்கிறார்கள். சில தனியார் நிறுவனங்களும் நீர்நிலைகளைச் சீரமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன.

நீர்நிலை
News
நீர்நிலை

மிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பெய்யும் மழைநீரை முறைப்படி சேகரித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாததே தற்போது உருவாகியுள்ள குடிநீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழகத்தில், வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தண்ணீர் சேமிப்புக் கட்டுமானங்கள் உண்டு. வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள் என ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஏற்ற வகையில் தண்ணீர் சேமிப்பு ஏற்பாடுகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் முறைப்படி பராமரிக்காததால் பாழ்பட்டுக் கிடக்கின்றன. அதிக அளவில் மழை பெய்தாலும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தாலும், அடுத்த சில மாதங்களில் தண்ணீருக்காக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக அலைகிறார்கள்.

நீர்நிலை
நீர்நிலை

இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், நீர்நிலைகளைத் தூர் வாரி, தண்ணீரை சேமித்துவைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில், பொதுமக்களும் இணையலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சரி, இதில் பொதுமக்கள் எப்படிப் பங்கேற்பது..? விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு வாசகர் பாலாஜி இதுகுறித்து ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார். "கிராமங்களில் உள்ள குளங்களை குடிமராமத்து திட்டம் மூலம் ஒரு தனி மனிதனோ அல்லது மக்கள் இணைந்தோ தூர் வார யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்... அதற்கான நடைமுறைகள் என்ன?"- இதுதான் பாலாஜி அனுப்பிய கேள்வி.

நீர்நிலை
நீர்நிலை

இதுகுறித்து திண்டுக்கல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியிடம் பேசினோம். "குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் மற்றும் அவற்றுக்கான வரத்து வாய்க்கால்களைக் குடிமராமத்து திட்டத்தின்மூலம் பொதுப்பணித்துறை சீரமைத்து வருகிறது. இந்த ஆண்டு, குடிமராமத்து திட்டத்துக்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. கிராம மக்கள் தங்கள் ஊரில் தூர் வாரப்படவேண்டிய நீர்நிலைகள் குறித்த தகவலோடு விண்ணப்பம் அளித்தால், குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர் வாரித் தரப்படும்.

தற்போது, பல இடங்களில் தன்னார்வலர்கள், விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளைத் தங்கள் செலவிலேயே தூர் வாரிக்கொள்கிறார்கள். சில தனியார் நிறுவனங்களும் நீர்நிலைகளைச் சீரமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இப்படித் தங்கள் செலவில் தூர் வார விரும்புபவர்கள், சீரமைக்க இருக்கும் நீர்நிலை பற்றிய தகவல்களோடு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

நீர்நிலை
நீர்நிலை

அந்த விண்ணப்பம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பொதுப்பணித்துறை பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பொதுப்பணித்துறை பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட நீர்நிலைகளை ஆய்வுசெய்து, 'கரைகளைச் சேதப்படுத்தக் கூடாது. நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களைச் சிதைக்கக் கூடாது' என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிப்பர். அதன்பிறகு, அவர்கள் தூர் வாரிக்கொள்ளலாம். வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளும் அனுமதிபெற்று, நீர்நிலைகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ளலாம். வரத்து வாய்க்கால்கள், நீர்நிலைகள் போன்றவற்றைச் சீரமைக்கும்போது எல்லைப் பிரச்னை எழுந்தால், வருவாய்த்துறை அதிகாரிகள்மூலம் எல்லைகளை அளந்து, அதன்பிறகு சீரமைக்க வேண்டும்" என்றார் அவர்.