Published:Updated:

How to: நாய்களுக்கு தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி? | How to vaccinate dogs?

Dogs (Representational Image)
News
Dogs (Representational Image) ( Pixabay )

``எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும் பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதற்கு, குட்டிகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே போதுமானது."

Published:Updated:

How to: நாய்களுக்கு தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி? | How to vaccinate dogs?

``எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும் பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதற்கு, குட்டிகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே போதுமானது."

Dogs (Representational Image)
News
Dogs (Representational Image) ( Pixabay )

செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயம். அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்பது வீட்டின் பாதுகாப்புக்கும் உதவும் என்பதால் பலரின் வீட்டு ரேஷன் அட்டையில் சேர்க்கப்படாத ஓர் உறுப்பினராக அது உள்ளது. நாய் வளர்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தடுப்பூசி அட்டவணை பற்றிச் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த செல்லப்பிராணி பயிற்றுநர் சிவக்குமார்.

சிவக்குமார்
சிவக்குமார்

``எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும் பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதற்கு, குட்டிகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே போதுமானது.

அங்கு கால்நடை மருத்துவர் Distemper மற்றும் மிக முக்கியமாக பார்வோ வைரஸ் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பூசியை (Nobivac puppy DP) செலுத்துவார்.

* தொடர்ந்து அடுத்தடுத்து எந்த மாதங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று, மருத்துவர் தெளிவாகக் குறிப்பிட்டு கூறுவார்.

பெரும்பாலும் அடுத்த 30 நாள்களுக்குள்ளாக அடுத்த தடுப்பூசியான Nobivac DHPPi செலுத்த வேண்டும். விருப்பத்தின்பேரில், நாயின் உடற்கூறுக்கு ஏற்ப எலிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் (Nobivac Lepto) அப்போது செலுத்தலாம்.

* அடுத்த 25 நாள்களுக்குள் ரேபிஸ் (Anti Rabies Vaccine) தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த ரேபிஸ் தடுப்பூசி மட்டும் இலவசமாகப் போடப்படும். இதனுடன் நாய்க்குட்டிகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி முடிந்துவிடும்.

* பின்னர் வருடத்துக்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாகச் செலுத்த வேண்டும். கடைசியாகச் செலுத்திய நாளிலிருந்து ஒரு வருடம் கணக்கிட்டு அடுத்த வருட தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.

* பிறந்ததிலிருந்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நான்கு மாத காலம்வரை நாய்க்குட்டியை வெளியில் கூட்டிச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

Dogs (Representational Image)
Dogs (Representational Image)
Pixabay

* மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை தொடர்பு கொண்டு Nobivac DHPPi தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது நல்லது.

மனிதர்களுக்கு எப்படி தடுப்பூசிகள் நோய்களிலிருந்து காப்பதற்கு மிக முக்கியத் தேவையாக இருக்கின்றனவோ, அதுபோல நாய்களுக்கும் தடுப்பூசிகள் மிக அவசியமானவை. நாய்க்கும், நாய் மூலம் நமக்கும் நோய் பரவுவதிலிருந்து தடுப்பூசிகள் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம்'' என்றார்.

- வாணிஶ்ரீ